Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தன்யா
பிரீமியம் ஸ்டோரி
தன்யா

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்துவரும் ஹரீஷ் கல்யாண், இந்தியில் ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அடுத்ததாக நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடித்துவரும் ஹரீஷ் கல்யாண், இந்தியில் ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அடுத்ததாக நடிக்கிறார்.

Published:Updated:
தன்யா
பிரீமியம் ஸ்டோரி
தன்யா
தன்யா
தன்யா

‘தாராள பிரபு’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஹரீஷ் ஜோடியாக ‘தடம்’ நாயகி தன்யா ஒப்பந்தமாகியிருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவ்யா தபார்
காவ்யா தபார்

‘மெட்ரோ’ ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில், தெலுங்கு நடிகை காவ்யா தபார் அவருக்கு ஜோடியாகிறார். ஆரவ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்திலும் காவ்யா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

டோலிவுட், பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது மலையாளப் படமொன்றில் கமிட்டாகியிருக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ, மோகன்லாலின் மகன் பிரணவ்.

மும்பையில் இருக்கும் திரையுலகப் பிரபலங்களுக்கு பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அனைத்துப் பிரபலங்களும் தள்ளாட்டத்தில் இருப்பதாக கமென்ட்ஸ் குவியவே, அப்செட்டில் இருக்கிறார் கரண் ஜோஹர்.

மிஸ்டர் மியாவ்

‘இமைக்கா நொடிகள்’ படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இதில், அவருக்கு 25 கெட்டப்புகளாம்! இதற்காக அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான மேக்கப் நிறுவனம் ஒன்று விக்ரமுக்கான கெட்டப் சேஞ்ச் வேலைகளைக் கையிலெடுத்திருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறதாம்.

மும்பையில் வசித்து வரும் தேஜாஸ்ரீ, சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், அவர் திரும்பவும் நடிக்க விரும்புவதாகவும், `பெரிய கேரக்டர் இல்லையென்றாலும் சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பையாவது கொடுத்து உதவுகள்’ என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ரசியல் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் முன்னணி நடிகர், தற்போது பிரமாண்ட இயக்குநரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். `இந்தப் படமும் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமாகவே இருக்கட்டுங்ணா’ என்று பிரமாண்டத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம். இயக்குநரும் ‘டபுள் ஓகே’ சொல்லியதாகத் தகவல்.

னது ஹேர் ஸ்டைலுக்கே பல ரசிகர்கள் இருப்பதாகக் கூறும் முருகன் நடிகர், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் இடம்பெறும் முகமூடிக் காட்சிகளில் ஹேர் ஸ்டைலுக்குப் பாதிப்பு வராத வகையில் மாஸ்க் மாட்டச் சொல்லியிருக்கிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism