விஜய்யின் 64-வது படத்தின் ஷூட்டிங் விரைவில் செங்கல்பட்டில் தொடங்குகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் அங்கே செட் அமைத்திருக்கிறார்கள். படத்தில், விஜய்க்கு புதுவிதமான கேரக்டரைக் கொடுத்திருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

சினிமாவுக்கு பிரேக் விட்டுவிட்டு வெப்சீரிஸ்களில் நடித்துக்கொண்டிருந்த சுனைனா, மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ட்ரிப்’ என்னும் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் சுனைனா.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ‘நிசப்தம்’ படத்தில் நடித்துவருகிறார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்தப் படத்தின் ஹீரோ மாதவன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் படம் தயாராகிறது.

‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கதாபாத்திரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தமிழில் எந்தப் படத்துக்கும் ஓகே சொல்லாத கீர்த்தி, தற்போது கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கியிருக்கிறது.

‘ஹரிதாஸ்’, ‘வாகா’ படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலின் அடுத்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அருண் விஜய். த்ரில்லர் படமான இதில் அருண் விஜய்க்கு போலீஸ் அதிகாரி ரோல். ‘குப்பத்து ராஜா’, ‘சிக்ஸர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பலாக் ஹீரோயினாக நடிக்கிறார்.

ம்யூட்

தமிழ் சினிமாவில் தற்போது எதிர்பார்ப்பில் இருக்கும் உச்ச நடிகருடைய படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் சென்னை கல்லூரி ஒன்றில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது. இந்த நடிகரின் முந்தைய இசை வெளியீட்டு விழாவும் இதே கல்லூரியில்தான் நடந்தது. விழாவுக்காக மாணவர்களுக்கு அரைநாள் விடுமுறை விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறதாம் கல்லூரி நிர்வாகம். ‘சினிமாவுக்காக மாணவர்களின் கல்வி நேரத்தை காவு வாங்குவதா’ என கல்லூரி நிர்வாகம் மீது கொதிப்பில் உள்ளனர் பெற்றோர்.

பிரபலங்களை வைத்து நிகழ்ச்சியை நடத்திவரும் அந்த சேனல் மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறாராம் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களைவிட, இந்த சீசனில் ஏற்பட்ட குளறுபடிகளால், தொகுப்பாளருக்கு ஏகப்பட்ட தலைவலியாம். அதுதான் அதிருப்திக்கு காரணம் என்கிறார்கள்.