Published:Updated:

மிஸ்டர் மியாவ்

காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

மிஸ்டர் மியாவ்

காஜல் அகர்வால்

Published:Updated:
காஜல் அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
காஜல் அகர்வால்

‘பார்ட்டி’, ‘மாநாடு’ படங்களின் பணிகள் கிடப்பில் இருக்க, வெப் சீரிஸ் இயக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார், இயக்குநர் வெங்கட் பிரபு. ஹாட் ஸ்டாருக்காக உருவாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில், காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

னுஷ் நடிக்கும் ‘அசுரன்’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், அடுத்ததாக ‘வடசென்னை 2’ படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிந்த பிறகு, காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக்கி சீரியஸான ஒரு படத்தை இயக்குகிறார்.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

‘சொன்னா புரியாது’ படத்துக்குப் பிறகு கிருஷ்ணன் ஜெயராஜ், அஞ்சலியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இந்தப் படத்தில், முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார், யோகி பாபு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

ங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். படத்தில் இவர், சித்தார்த்துக்கு ஜோடி.

மிஸ்டர் மியாவ்

‘கப்பல்’ படத்துக்குப் பிறகு கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, நிவாஸ் கே.பிரசன்னா இசையில் சிம்பு ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மிஸ்டர் மியாவ்

ம்பர் நடிகையின் படம் ஒன்று இதுவரை ஐந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இந்த மாதம் நிச்சயம் ரிலீஸாகும் என்றிருந்த நிலையில், மீண்டும் ஒருமுறை தள்ளிப்போயிருக்கிறது. இதற்கு முன் நடித்த படம் ஒன்று தோல்வியைச் சந்தித்த நிலையில், இந்தப் படத்துக்கும் தொடர்ந்து பிரச்னைகள் வருகிறதே என்று கவலையில் இருக்கிறாராம், நடிகை.

வெளிச்ச நடிகரின் அரசியல் பேச்சுக்கு சினிமா பிரபலங்களிடமிருந்து பரவலான பாராட்டுகள் கிடைத்த நிலையில், அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கின்றன, சில அரசியல் கட்சிகள். குடும்பக் கட்சியும் அதில் அடக்கம்.

பெயரில் அப்பாவை இணைத்திருக்கும் இளம் நடிகைக்கு, சென்னையில் மையப் பகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கிக் கொடுத்திருக்கிறாராம் கருத்து இயக்குநர்.