Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சம்யுக்தா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
சம்யுக்தா மேனன்

அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படம், ‘மெட்ரோ’ படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக மீடியாக்களில் பரபரப்பு கிளப்பினார் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன்.

மிஸ்டர் மியாவ்

அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படம், ‘மெட்ரோ’ படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக மீடியாக்களில் பரபரப்பு கிளப்பினார் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன்.

Published:Updated:
சம்யுக்தா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
சம்யுக்தா மேனன்

‘அடுத்த ரஜினி’ என்கிற அடையாளத்தைப் பெற்றுவிட மிகச் சரியாக வியூகம் வகுத்துச் செயல்படுபவர் சிவகார்த்திகேயன். ‘ரஜினி முருகன்’ எனக் கதாபாத்திரத்தின் பெயர் தொடங்கி படத்தலைப்புகள் வரை அதற்காக மெனக்கெடுபவர். ரஜினி நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ டைட்டிலை ஏற்கெனவே கைப்பற்றிய சிவகார்த்திகேயன், ‘மண்டேலா’ இயக்குநர் மடோனா அஸ்வின் கதையில் உருவாகும் படத்துக்கு ‘மாவீரன்’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார். ‘பக்கா ஆக்‌ஷன் கதையைத் தேர்ந்தெடுத்து அடுத்தகட்டத்துக்கு உயர்கிறார் சிவகார்த்திகேயன்’ எனக் காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள்.

தெலுங்கில் மினிமம் கியாரன்டி நடிகராக வலம்வரும் நானியைத் தமிழுக்குக் கொண்டுவர பலரும் முயற்சி எடுக்கிறார்கள். தமிழில் ‘வெப்பம்’ படத்துக்குப் பிறகு நானி இதுவரை படம் செய்யவில்லை. இதற்கிடையில், இங்கிருந்து போய் கதை சொல்லும் இயக்குநர்களிடம், “தெலுங்குக்கு ஏற்ற கதைகளை மட்டுமே சொல்லுங்கள். மீண்டும் தமிழுக்கு வர நான் பிரமாண்ட இயக்குநர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் தேதிக்காகக் காத்திருக்கிறேன்” என்கிறாராம் நானி. மனதுக்குப் பிடித்த கதைகளைத் தன் நிறுவனத்திலேயே தயாரிக்கவும் தொடங்கியிருக்கிறார் நானி.

சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்

இயக்குநர் அமீரின் தாயார் மறைந்த துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல மதுரைக்குப் போனார் நடிகர் கார்த்தி. ‘பருத்திவீரன்’ ரிலீஸான பிறகு இத்தனை வருடங்களாக மன வருத்தத்தில் இருந்த அமீரும் கார்த்தியும் இப்போது மனம்விட்டுப் பேசுகிற அளவுக்கு நெருங்கியிருக்கிறார்கள். இதைவைத்து, ‘பருத்திவீரன் - 2’ ஸ்டார்ட் ஆக வாய்ப்பிருக்கிறதா என நெருங்கியவர்கள் கேட்க, ‘பருத்திவீரனை மிஞ்சுகிற பக்கா கிராமத்துக் கதை ரெடி…’ என்றாராம் அமீர். கைவசமிருக்கும் மூன்று படங்களை முடித்துவிட்டு கார்த்தியுடன் மீண்டும் கைகோக்கவிருக்கிறாராம்.

அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படம், ‘மெட்ரோ’ படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக மீடியாக்களில் பரபரப்பு கிளப்பினார் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன். அடுத்தகட்டமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் செய்தார். இரு படங்களின் கதைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பது நீதிமன்றத்தில் ஊர்ஜிதமாகிவிடும் எனத் தெரியவர, தன் வழக்கை வாபஸ் பெறுவதாகத் தன் வழக்கறிஞர் மூலமாக அறிவித்திருக்கிறார் ஜெயகிருஷ்ணன். வழக்கு போடப்பட்டபோதும், வாபஸ் பெறப்பட்டபோதும் இது குறித்து வாய் திறக்காமல் மௌனமாகக் கடந்து போகிறார் `வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத்.

உஷ்...

உடல் இளைத்து மீண்டும் அடுத்த ரவுண்ட் வர ஆசைப்பட்டார் தென்னிந்தியப் பிரபலமான அக்கடதேசத்து உயர நடிகை. அதற்காக அடுத்தடுத்த சிகிச்சைகளையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், எடுத்த சிகிச்சைகளே சிக்கலைக் கொடுத்து அம்மணியைத் திண்டாட வைக்கின்றனவாம். அதனால், கமிட்டான படங்களைக்கூடக் கழற்றிவிட்டு, தற்போது ஓய்வில் இருக்கிறாராம்.