Published:Updated:

மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

தன்னுடைய தயாரிப்பில் உருவான ‘ராக்கி’ படத்தை, சமீபத்தில் ரஜினிக்காக பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் நயன்தாரா.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பெரிய ஹிட்டடித்திருக்கும் நிலையில் அந்த வெற்றியை வைத்து, தனக்கு விடிவு தேடிக்கொள்ள நினைக்கிறார் ஹன்சிகா மோத்வானி. தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹாரர் படம் ஒன்றில் நடித்துவரும் ஹன்சிகா, சிம்புவுடன் சேர்ந்து நடித்துத் தயாரித்த ‘மகா’ படத்தை இப்போது ரிலீஸ் செய்ய நினைக்கிறார். படம் தயாராகியும் பல காலமாகக் கிடப்பில் கிடப்பதால் ‘மாநாடு’ பரபரப்புடன் ‘மகா’ படத்தையும் பிசினஸ் பேசத் தொடங்கியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்
மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்
மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்
மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்
மிஸ்டர் மியாவ் - ரம்யா பாண்டியன்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் நினைத்ததைவிடப் பெரிதாகச் சாதித்திருக்கிறது. தமிழ்நாடு விநியோக உரிமையைப் பெற்றிருந்த லைகா நிறுவனம், ஐந்தே நாள்களில் அசத்தல் லாபத்தை அடைந்திருக்கிறது. இதனால் அல்லு அர்ஜுனை வைத்து நேரடியாகத் தமிழில் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் லைகா இறங்கியிருக்கிறதாம். ‘நல்ல கதை கிடைத்தால் நான் ரெடி’ என அல்லு அர்ஜூன் சொல்ல, முன்னணி இயக்குநர்களோடு பேசிவருகிறது லைகா.

அஜித்தின் வலிமை படத்தில், 35 நிமிடங்களுக்கும் மேல் சண்டைக் காட்சிகள் இடம்பெறுவதால், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயனுக்குப் பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ‘இதுவரை எந்தப் படத்துக்காகவும் அவர் வாங்கியிராத சம்பளம்’ என்கிறார்கள் கண்களைச் சிமிட்டி. ரஷ்யாவில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளைச் சமீபத்தில் பார்த்த அஜித், படக்குழுவினரை வியந்து பாராட்டினாராம். ‘ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை’ எனத் திட்டமிட்டு, குறுகிய நாள்களில் அந்தச் சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் முடித்துக் கொடுத்தாராம்.

தன்னுடைய தயாரிப்பில் உருவான ‘ராக்கி’ படத்தை, சமீபத்தில் ரஜினிக்காக பிரத்யேகமாகத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் நயன்தாரா. படத்தில் பாரதிராஜாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன ரஜினி, அவருக்கு போன் பண்ணி பாராட்டித் தள்ளிவிட்டாராம். “இத்தனை வருடங் களாக எத்தனையோ படங்களை இயக்கியதில் கிடைக்காத பாராட்டு, சில படங்களில் நடிப்பதன் மூலமாக எனக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இனி முழு நேர நடிப்புதான்” என ரஜினியிடம் சொன்னாராம் பாரதிராஜா.

உஷ்…

‘வில்லேஜ் படங்களில் ஓவர் மேக்கப் வேண்டாம்’ என இயக்குநர்கள் சொன்னதால், அதற்கேற்றபடி யதார்த்தமாக நடித்தார் அக்கட தேசத்து அம்மணி. ஆனால், அவர் மேக்கப் போடாமல் நடித்த இரு படங்களிலுமே அவருடைய முகத்தோற்றத்துக்கு விமர்சனங்கள் கிளம்ப, ‘இனி வில்லேஜ், யதார்த்தம் என என் பக்கம் யாரும் வரக் கூடாது’ எனக் கத்தித் தீர்த்துவிட்டாராம். #என் அத்தனை அழகும் ஆத்துல கரைச்ச பெருங்காயம் சாமி... ஏ.. சாமி!