Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பார்வதி திருவோத்து
பிரீமியம் ஸ்டோரி
News
பார்வதி திருவோத்து

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார் நடிகை ஆத்மிகா.

நடிகை பார்வதியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மற்ற ஹீரோயின்களைக் காட்டிலும் வித்தியாசமாகத்தான் இருக்கும். சமீபத்தில், அவர் ‘The Unravel Series’ என்ற கேப்ஷனில் வித்தியாசமான மேக்கப்பில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். பார்வதி இயக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
  • ‘ஓ மை கடவுளே’, ‘லாக்கப்’ என வாணி போஜன் நடித்த படங்கள் வரவேற்பைப் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆதவ் கண்ணதாசனுடன் ‘தாழ் திறவா’, விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது, ‘கேசினோ’ என்ற புதிய படத்தில் கமிட்டாகி யிருக்கிறார் வாணி. இதில் நாயகனாக ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘பெண்குயின்’ படங்களில் நடித்த ரங்கராஜ் நடிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்
  • சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார் நடிகை ஆத்மிகா. ‘எந்தப் பட போஸ்டரிலும், அதில் நடிக்கும் ஹீரோயினின் பெயர் குறிப்பிடப்படுவதில்லை ஏன்?’ என்ற கேள்வியை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ‘அப்படியெல்லாம் இல்லையே...’ என ஹீரோயின்கள் பெயர்கள் இருக்கும் போஸ்டர்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது, இவர் விஜய் ஆண்டனியுடன் ‘கோடியில் ஒருத்தன்’ படத்தில் நடித்துவருகிறார்.

  • மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி, ஹிட்டான ‘ஹெலன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ படங்களில் நடித்த அனிகா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. தற்போது, ‘கப்பேலா’ எனும் மலையாளப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘ஹெலன்’, ‘கப்பேலா’ ஆகிய இந்த இரண்டு மலையாளப் படங்களிலும் அன்னா பென்தான் நாயகி.

மிஸ்டர் மியாவ்
  • ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எனிமி’ க்ரைம் த்ரில்லர் படத்தில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துவருகின்றனர். படத்தின் கதாநாயகி மிருணாளினி ரவி. ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது படப்பிடிப்பு. பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  • மலையாளத்தில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் சனு ஜான் வர்கீஸ் முக்கியமானவர். தமிழில் ‘விஸ்வரூபம்’, இந்தியில் ‘பதாய் ஹோ’, தெலுங்கில் ‘ஜெர்ஸி’ எனப் பல மொழிகளில் பணியாற்றியிருக்கும் இவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் பார்வதியும் பிஜு மேனனும் லீட் ரோலில் நடித்திருக்கின்றனர்.