Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா...

பிரீமியம் ஸ்டோரி
  • ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ என சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இவை தவிர, ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படத்துக்கு ‘பிஸ்கோத்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஸா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

தாரா அலிஸா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா
தாரா அலிஸா பெர்ரி, ஸ்வாதி முப்பாலா
  • சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தவிர, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இதன் படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் நடக்கவிருக்கிறது.

இஷா கோபிகர்
இஷா கோபிகர்
  • இயக்குநர் ரவிக்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகிவரும் ‘அயலான்’ படத்தில், முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் நடிகை இஷா கோபிகர். இவர் நடிக்கும் காட்சிகளை, தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த நினைத்து அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துள்ளார் பவன் கல்யாண். இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளனர். ஹரீஷ் ஷங்கர் - பவன் கல்யாண் - ஸ்ருதிஹாசன் கூட்டணியில் ‘கப்பார் சிங்’ என்ற படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

தன்ஷிகா
தன்ஷிகா
  • ‘கபாலி’ படத்தில் தன்ஷிகாவின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து, தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. இடையில் அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் தாமதமானதால் வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டார் தன்ஷிகா. இப்போது அந்தத் தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் அந்தப் படத்துக்கு ‘வல்லு ஜடா’ எனப் பெயரிட்டுள்ளனர்.

யாஷிகா ஆனந்த்.
யாஷிகா ஆனந்த்.
படம்: தே. அசோக்குமார்
  • ஆர் ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்று வருகிறது. நயன்தாரா, ஊர்வசி, இந்துஜா ஆகியோர் நடித்துவரும் இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் யாஷிகா ஆனந்த்.

ம்யூட்

  • இளம் இயக்குநருடைய இரண்டாவது படமே இன்னும் வெளிவரவில்லை. இருந்தும் அவருக்கு கோலிவுட்டின் பல துருவங்களிலிருந்தும் வாய்ப்புகள் வருகின்றனவாம். அசுர நடிகரிடம் கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம் அந்த அசுரன். இதற்கிடையில், ‘கோலிவுட்டின் உச்ச நட்சத்திரத்துக்கான கதை இருந்தால் சொல்லுங்கள். அவரிடம் கால்ஷீட் கேட்கலாம்’ என முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்த இயக்குநரிடம் சொல்லியிருக்கிறதாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு