Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ஷாருக் கான் மகன் போதை வழக்கில் சிக்கியதால் ஷூட்டிங் தள்ளிப்போக, நயன்தாரா ஒதுக்கிய தேதிகளில் குளறுபடியாகியிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

`வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் இயக்குநர் அமீரும் நடிக்கிறார் என வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் பயங்கர பரபரப்பாகியிருக்கிறது. காரணம், ‘பருத்தி வீரன்’ படப் பிரச்னையில் சூர்யாவுக்கும் அமீருக்கும் கடுமையான மோதலானது. சமீபத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘கண்ணபிரான்’ என்கிற தலைப்பு தேவைப்பட, இயக்குநர் பாண்டிராஜ் அமீரை அணுகினார். ஆனாலும், அமீர் அதைக் கொடுக்க மறுத்துவிட்டார். இப்படி நீறுபூத்த நெருப்பாக சூர்யாவுக்கும் அமீருக்கும் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய ‘மாறன்’ படத்தை, கணிசமான தொகைக்கு ஓடிடி தளத்துக்குத் தள்ளிவிட்டது சத்யஜோதி நிறுவனம். இதில் தனுஷ் ரசிகர்கள் பலரும் ஆவேசமாகி ஆன்லைனில் கொந்தளிக்க, ‘ஓடிடி-யில் வெளியிடச் சொன்னதே தனுஷ்தான்’ என்கிற தகவல் நிறுவனத்துக்கு நெருக்கமான ஆட்களிடமிருந்து வெளியாகியிருக்கிறது. தனுஷின் ‘மாறன்’ படத்துடன் ஹிப்ஹாப் ஆதியின் படத்தையும் சேர்த்துக் கொடுத்துத்தான் கணிசமான தொகையைப் பெற்றதாம் சத்யஜோதி நிறுவனம்.

கொரோனாகால நெருக்கடி நேரத்தில் தீபாவளி வருவதால், பொருளாதாரச் சிக்கலுக்கு உதவும்விதமாக, தங்கள் சங்கத்து உறுப்பினர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம். பணத்தை நேரடியாகக் கொடுத்தால், தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என நினைத்து, உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தும்படி உத்தரவிட்டாராம் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ்.

மிஸ்டர் மியாவ்

ஷாருக் கானை வைத்து அட்லி இயக்கும் படத்தில், நயன்தாரா விலகிக்கொண்டதாகவும் அவருக்கு மாற்றாக சமந்தா சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கிளம்பிய பரபரப்பில் துளியளவும் உண்மை இல்லையாம். ஷாருக் கான் மகன் போதை வழக்கில் சிக்கியதால் ஷூட்டிங் தள்ளிப்போக, நயன்தாரா ஒதுக்கிய தேதிகளில் குளறுபடியாகியிருக்கிறது. ஆனாலும் நிலைமையைச் சொல்லி அட்லி விளக்கம் கொடுக்க, “நோ ப்ராப்ளம்… நான் தேதிகளை அவசியம் மாற்றிக்கொடுக்கிறேன்” எனச் சொன்னாராம் நயன்தாரா.

‘அண்ணாத்த’ படத்துக்கு அடுத்தபடியாக, ரஜினியின் படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் பரபரப்பு கேள்வி. கார்த்திக் சுப்புராஜ், தேசிங் பெரியசாமி, பாண்டிராஜ் உள்ளிட்ட 23 இயக்குநர்களிடம் இதுவரை கதை கேட்டிருக்கிறாராம் ரஜினி. ஆனால், விருப்பமான கதை என அவர் இதுவரை எதையும் சுட்டிக்காட்டவில்லையாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் இது குறித்துக் கேட்க, “கார்த்திக் சுப்புராஜை மட்டும் காத்திருக்கவையுங்கள்” என்றாராம் ரஜினி.

உஷ்…

வம்பு நடிகரின் படத்தை வெளியிடவிடாமலும், அவருடைய படப்பிடிப்பை நடக்கவிடாமலும் செய்யப்படுகிற சூழ்ச்சிக்கு விடிவு தேடி முதன்மையானவரைச் சந்திக்க நினைத்தாராம் தாடிக்காரர். நடக்கிற சூழ்ச்சிகளுக்கு ஆளும் தரப்பின் பின்னணி வேலைகளும் காரணம் எனத் தெரியவர, முழுவதுமாக மோதுவது என முடிவெடுத்துவிட்டாராம். #ஏ... டண்டணக்கா ஏ... டணக்குணக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு