Published:Updated:

மிஸ்டர் மியாவ்

உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் 2021 ஓணம் பண்டிகையன்று வெளியாகவிருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது தெலுங்கு, கன்னடம் என பிஸி. தமிழிலும் மாதவனுடன் ‘மாறா’, விஷாலுடன் ‘சக்ரா’ என இரண்டு படங்கள் உள்ளன. இந்நிலையில், மோகன்லால் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி கேரக்டராம். ஐந்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் நடிக்கவிருக்கிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம் 2021 ஓணம் பண்டிகையன்று வெளியாகவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

னந்த் ஷங்கர் இயக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தில் விஷால்-ஆர்யா இருவரும் நடிக்கின்றனர். இதில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் கதாநாயகியாக மிருணாளினி ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சமீரா ரெட்டியிடம் கேட்டிருக்கிறார்களாம்.

மிஸ்டர் மியாவ்

பாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தாலும் அடுத்தடுத்து தெலுங்குப் படங்களில் பிஸியாக இருந்தார் நிதி அகர்வால். தற்போது, கோலிவுட் அவரை வரவேற்கத் தொடங்கியிருக்கிறது. ஜெயம் ரவியுடன் ‘பூமி’, சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’ என இரண்டு படங்கள். தவிர, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கும் இவர்தான் ஹீரோயின். இதில் நடிக்க முதலில் அனு இமானுவேல்தான் ஒப்பந்தமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் புதிதாக வந்துவிட்டால் அதுதான் அன்றைய `டாக் ஆஃப் தி சோஷியல் மீடியா’வாக இருக்கும். வொர்க்அவுட், யோகா என இரண்டிலும் கவனம் செலுத்தும் மாளவிகா, தன்னுடைய ஃபிட்டான வயிற்றைப் புகைப்படம் எடுத்து அதைப் பதிவிட்டிருக்கிறார். வழக்கம்போல இதுவும் பேசுபொருளாகிவிட்டது. ‘மாஸ்டரை’ அடுத்து இன்னொரு தமிழ்ப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறாராம். விரைவில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘புரியாத புதிர்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி தற்போது இயக்குநராகியிருக்கிறார். ‘இந்தியன் ஃபிலிம் புராஜெக்ட்’ என்ற குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு, அதில் கொடுக்கப்படும் 50 மணி நேரத்தில் ஒரு குறும்படத்தை இயக்கி, சமர்ப்பிக்க வேண்டுமாம். அதில் ‘Road to Thumba’ என்ற குறும்படத்தை இயக்கி வென்றிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு