Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பேன்

மீண்டும் இந்தியில் உருவாகவிருக்கிறது `நாகின்’ திரைப்படம். மூன்று பாகங்களாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், `சாஹோ’ `ஓகே ஜானு’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா கபூர் `நாகின்’ கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். மனித உருவமாக மாறும் சக்திகொண்ட இச்சாதாரி நாகம், தனது ஜோடியைக் கொன்ற ஐந்து மனிதர்களைப் பழிவாங்கும் கதையே ‘நாகின்.’ 1976-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தின் ரீமேக்தான் தமிழில் கமல் நடிப்பில் வெளியான `நீயா.’ ``திரையில் நாகினாக தோன்றி நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ எனச் சிலாகித்திருக்கிறார் ஷ்ரத்தா கபூர்.

மிஸ்டர் மியாவ்

 காஜல் அகர்வாலின் திருமணம் அக்டோபர் 30-ம் தேதியன்று மும்பையில் நடந்து முடிந்தது. கொரோனா காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமணத்தில் எடுக்கப்பட்ட காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்தான் இந்த வார வைரல்! `காஜலுக்குத் திருமணம் ஆகிவிட்டதே’ என்று அவரின் ரசிகர்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருந்தாலும், `திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பேன்’ என்று அவர் தெரிவித்திருப்பதால், மனதைத் தேற்றிக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.

மிஸ்டர் மியாவ்

 தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இலியானா. விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது, இவர் நடித்திருக்கும் `தி பிக் புல்’ என்ற இந்திப் படம். கொஞ்ச நாளாக லைம்லைட்டிலேயே இல்லாமல் இருந்த இலியானா, தற்போது மீண்டுமொரு பாலிவுட் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ரந்தீப் ஹூடா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, `Unfair & Lovely’ எனப் பெயரிட்டிருக் கிறார்கள். காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை வீடியோ காலில் படித்து, காட்சிகள் குறித்து ஆலோசித்திருக் கிறார்கள் இலியானாவும் ரந்தீப்பும். `இது புது அனுபவமாக இருந்தாலும் உற்சாகமாகவே இருக்கிறது’ என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் இலியானா.

மிஸ்டர் மியாவ்

 தமிழில் `சேவல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து, `கச்சேரி ஆரம்பம்’, `ஆம்பள’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். லாக்டெளன் காலத்தில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலான பூனம், தனது காதலரான சுனில் ரெட்டியையும் ஓர் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சுனில் ரெட்டியின் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் வைரலாகின. விரைவில் பூனம் வீட்டில் `டும் டும் டும்’ சத்தம் கேட்கலாம்!2008-ம் ஆண்டு `காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சுனைனா. அதன் பிறகு மனதில் நிற்கும்படியான படங்கள் எதுவும் அமையாதவருக்குக் கடந்த ஆண்டு `சில்லுக்கருப்பட்டி’ படம் மூலம் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. இதுவரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நான்கு வெப் சீரிஸ்களில் நடித்திருக்கும் சுனைனாவுக்குப் பட வாய்ப்புகளைவிட வெப் சீரிஸ்களுக்கான வாய்ப்புகள் தான் அதிகம் வருகிறதாம். இந்த லாக்டெளன் முழுவதும் பல கதைகளைக் கேட்டிருக் கிறாராம். சமீபத்தில், கடற்கரை அருகே வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அங்கே லைக்ஸ் மழை விடாமல் பொழிகிறது!