Published:Updated:

மிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்: ப்ரியமான ப்ரியா

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நிஹாரிகா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள். அந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சுவாதினி இயக்கத்தில் அசோக் செல்வனுடன் புதிய தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். படத்தை முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், லாக்டெளன் காரணமாக இன்னும் படப்பிடிப்பு தொடங்கப் படவில்லை. திருமண தேதி நெருங்கி வருவதால் படத்திலிருந்து நிஹாரிகா விலக, அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கவிருக்கிறார்.

ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை எம்.ராஜேஷ் இயக்குகிறார். அதில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மற்ற பகுதிகளை இயக்குநர்கள் கெளதம் மேனன், வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், சிம்புதேவன் ஆகியோர் இயக்கவிருக்கின்றனர்.

தமிழில் ‘சுமோ’, இந்தியில் ‘சிம்பிள் மர்டர்’ என இரண்டு வெப் சீரிஸ், ப்ரியா ஆனந்த் வசமுள்ளன. தற்போது, கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை, ‘ஈட்டி’ பட இயக்குநர் ரவிஅரசு இயக்குகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ப்ரியமான ப்ரியா
ப்ரியமான ப்ரியா

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கும் பாலிவுட் படம், ‘அத்ரங்கி ரே’. ஊரடங்கு முடிந்ததும் இந்தப் படத்தின் ஷூட்டிங்குக்குதான் தனுஷ் செல்லவிருக்கிறார். படப்பிடிப்பு மதுரையில் நடக்கவிருக்கிறது. இதை முடித்துவிட்டு ‘கர்ணன்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்வாராம்.

சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்பவர்கள், நெகட்டிவ் விமர்சனங்கள் செய்பவர்கள் ஆகியோருக்காக ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘பல நெகட்டிவ் கமென்டுகள் மிகவும் காயப்படுத்து கின்றன” என்று கூறியுள்ளார். அருண் விஜய்யுடன் ‘பாக்ஸர்’, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் ஆகியவை ரித்திகா கைவசமுள்ளன என்பது கூடுதல் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism