‘இருட்டு’ படத்தை முடித்த இயக்குநர் வி.இசட்.துரையின் அடுத்த ஹீரோ விஜய் சேதுபதி. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

`ரஜினியின் அடுத்த பட இயக்குநரும் ஏ.ஆர்.முருகதாஸ்தான்’ எனப் பரவிய செய்தியில் உண்மையில்லையாம்! தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அடுத்து தெலுங்குப் படத்தை இயக்குகிறார் முருகதாஸ்.

மலையாளத்தில் ‘பிரஜாபதி’ படத்தின் மூலம் கரியரை ஆரம்பித்த அதிதி ராவ், பிறகு பாலிவுட் சென்றுவிட்டார். தமிழில் அவரை ‘காற்று வெளியிடை’, ‘செக்கச் சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடிக்கவைத்தார் மணிரத்னம். இப்போது தமிழில் ‘சைக்கோ’, ‘துக்ளக் தர்பார்’, தெலுங்கில் நானியுடன் ‘V’, மலையாளத்தில் ‘சுஃபியும் சுஜாதாயும்’ என அம்மணி படு பிஸி!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங், நவம்பரில் ஆரம்பம். 70 சதவிகிதப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கவிருக்கிறதாம்.

‘சூரரைப் போற்று’ படம் முடிந்ததும் ஹரி படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் வில்லனாக நடிக்க, அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இனி வில்லனாக நடிப்பதில்லை என அர்ஜுன் தனது கொள்கை முடிவைச் சொல்ல... வேறு வில்லன்களைத் தேடிவருகின்றனர்.

ம்யூட்:

தமிழ் சினிமாவின் வெளீர் நடிகை, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘பளீர்’ கதைகளில் மட்டும் நடிக்க முடிவு எடுத்திருக்கிறாராம். எல்லாம் ‘நம்பர் ஒன்னை’ப் பார்த்து வந்த ஆசை என்கிறார்கள். இதற்காக தன் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறாராம்.

பரபரப்பைக் கிளப்பிய முன்னணி நடிகரின் இசை வெளியீட்டு விழாவுக்கு, நம்பர் ஒன் நடிகை வரவில்லை. இதனால் அவர்மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம் நடிகர் தரப்பு. அதேசமயம், அந்த நடிகை நடித்துக்கொண்டிருக்கும் உச்ச நடிகரின் பட ஆடியோ விழாவுக்கு நடிகை போவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுப்பதால், மேலும் கடுப்பாகிவிட்டாராம் நடிகர்.