Published:Updated:

மோகன்லாலின் மான்ஸ்டர் பட ரிலீஸுக்குத் தடை; காரணம் இதுதான்!

மோகன்லால்

மோகன்லாலின் மான்ஸ்டர் திரைப்படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட அனுமதி மறுத்துள்ளனர்.

மோகன்லாலின் மான்ஸ்டர் பட ரிலீஸுக்குத் தடை; காரணம் இதுதான்!

மோகன்லாலின் மான்ஸ்டர் திரைப்படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட அனுமதி மறுத்துள்ளனர்.

Published:Updated:
மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'மான்ஸ்டர்' இப்படத்தை மலையாளத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த 'புலி முருகன்' படத்தின் இயக்குநர் வைசாக் இயக்கியுள்ளார். ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார். லக்கி சிங் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மோகன்லாலுடன் சித்திக், மஞ்சு லட்சுமி, ஹனி ரோஸ், கணேஷ் குமார், லீனா, சுதேவ் நாயர் உள்ளிட்ட பலர் `மான்ஸ்டர்' படத்தில் நடித்துள்ளனர். படம் வரும் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.
இந்நிலையில் மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மோகன்லாலின் மான்ஸ்டர்
மோகன்லாலின் மான்ஸ்டர்

இப்படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து சில காட்சிகள் இடம்பெறுவதால் சம்பந்தப்பட்ட தணிக்கை குழு படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம், கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வருவதால் `மான்ஸ்டர்' படத்திற்கு கிடைக்கும் வசூல் கிடைக்காது என படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்போதும் மோகன்லால் படத்திற்கு வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், படக்குழு அதிரடியாக முடிவெடுத்து சர்ச்சைக்குரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் வரும் காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு அரபு நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.