Published:Updated:

`சக்திமானை கேலி செய்ய அனுமதிக்க மாட்டேன்!' - கொதிக்கும் முகேஷ் கண்ணா

1997-ல் இருந்து 2005 வரை தூர்தர்ஷனில் வெற்றிகரமாக ஒளிப்பரான சக்திமான் சீரியல், 90-ஸ் குழந்தைகளின் எவர்க்ரீன் ஃபேவரைட். அதில் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவே அதைத் தயாரித்தும் இருந்தார்.

`ஹேப்பி வெட்டிங்', `சங்க்ஸ்', `ஒரு அடார் லவ்' போன்ற படங்களை இயக்கியவர், ஒமர் லுலு. தற்போது, `தமாக்கா' எனும் படத்தை இயக்கிவருகிறார். மலையாள நடிகரான முகேஷ், அப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்காக அவர் சக்திமான் கெட்டப்பில் வந்த ஓர் புகைப்படம், தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

Shakthimaan
Shakthimaan

1997-ல் இருந்து 2005 வரை தூர்தர்ஷனில் வெற்றிகரமாக ஒளிபரப்பான `சக்திமான்' சீரியல் 90-ஸ் குழந்தைகளின் எவர்க்ரீன் ஷோ. அதில் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவே அதைத் தயாரித்தும் இருந்தார். `தமாக்கா' படத்துக்காக மலையாள நடிகர் முகேஷ், `சக்திமான்' வேடத்தில் நடித்திருந்தார். இதைப் பார்த்த முகேஷ் கண்ணா, FEFKA இயக்குநர் சங்கத்திடம் ஒமர் லுலு மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய இயக்குநர் ஒமர், ``படத்தில் அந்த போர்ஷன் வெறும் 10 நொடிகள் மட்டுமே இடம்பெறும். இத்தனைக்கும் அந்தக் காட்சியானது அவரைப் பாராட்டும் விதமாகவே எடுக்கப்பட்டது. முதலில் சூப்பர்மேன் கெட்டப்பில்தான் அதை எடுக்கலாம் என்றிருந்தோம். நான்தான் அனைவரும் விரும்பும் இந்திய சூப்பர் ஹீரோவான சக்திமேன் கெட்டப்பைப் பரிந்துரைத்தேன்'' என்றார்.

இது தொடர்பாக படக்குழு என்னை அணுகவில்லை. ஒருவேளை அணுகினால் என்னைப் படத்தில் எப்படிக் காட்டியிருக்கிறார்கள் எனப் பார்ப்பேன்
முகேஷ் கண்ணா

இந்த சர்ச்சை தொடர்பாகப் பேசிய முகேஷ் கண்ணா, ``இது இன்னும் முடியவில்லை. சக்திமான் சார்ந்த அனைத்து பதிப்புரிமையும் என்னிடம்தான் உள்ளது. என்னுடைய அனுமதியில்லாமல், அதுவும் கேலி செய்யும்விதமாக யாரையும் அதைப் பயன்படுத்த விடமாட்டேன். இதுபோன்ற விஷயத்தைச் செய்வதற்குமுன் அதன் படைப்பாளியிடம் அனுமதி கேட்க வேண்டும் என்கிற அடிப்படை மரியாதைகூட அந்தப் படக்குழுவினருக்குத் தெரியவில்லை'' என தன் தரப்பு கருத்தைச் சொல்லியிருந்தார்.

மேலும், ``இது தொடர்பாக படக்குழு இன்னும் என்னை அணுகவில்லை. ஒருவேளை அணுகினால் என்னைப் படத்தில் எப்படிக் காட்டியிருக்கிறார்கள் எனப் பார்ப்பேன். அதற்காகக் காத்திருக்கிறேன்'' எனக் கொதிப்புடன் கூறியிருக்கிறார் முகேஷ் கண்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு