Published:Updated:

Netflix அக்கவுன்ட்டை மற்றவர்களுக்கு பகிர கூடுதல் கட்டணம்! மேலும் புதிய திட்டங்கள் என்ன?

Netflix (Representational Image)

பலர் தங்கள் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

Netflix அக்கவுன்ட்டை மற்றவர்களுக்கு பகிர கூடுதல் கட்டணம்! மேலும் புதிய திட்டங்கள் என்ன?

பலர் தங்கள் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.

Published:Updated:
Netflix (Representational Image)

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக பல திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் கூட ஓ.டி.டி தளங்களில் வெளியாகின. இதையடுத்து பலர் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓ.டி.டி தளங்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதில் பலர் பணம் கட்டிப் பெற்ற ஒரே கணக்கை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலருடன் பகிர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இது போன்று ஒரே கணக்கைப் பலர் பயன்படுத்துவதால் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸின் இயங்குநர் செங்கி லாங் கூறியுள்ளார்.

Netflix (Representational Image)
Netflix (Representational Image)

இதுப் பற்றிக் கூறிய அவர், ’எங்கள் ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் திட்டங்களில் தனித்தனி சுயவிவரங்கள் மற்றும் பல ஸ்ட்ரீம்கள் போன்ற வசதிகள் மூலம் ஒன்றாக வாழ்பவர்கள் தங்கள் Netflix கணக்கைப் பகிர்வதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம். இவை மிகவும் பிரபலமாக இருந்தாலும், Netflix கணக்கு எப்போது, எப்படி பகிரப்படலாம் என்பது குறித்து சில குழப்பங்கள் உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, வீட்டில் இருப்பவர்களுக்கிடையே Netflix கணக்குகள் பகிரப்படுகின்றன. இது டிவி மற்றும் திரைப்படங்களில் முதலீடு செய்யும் எங்கள் உறுப்பினர்களை பாதிக்கிறது.’ என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வாறு கணக்குகள் பகிரப்படுவதைத் தடுக்க ‘கூடுதல் உறுப்பினரைச் சேர்க்கவும் (Add an Extra Member) மற்றும் ‘புதிய கணக்கிற்கு சுயவிவரத்தை மாற்றவும் (Transfer Profile to a New Account)’ என்ற இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது நெட்ஃபிளிக்ஸ். இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் கணக்குகளைப் பகிர கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இது எந்த வகையில் பலனளிக்கும் என்பதை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். முதற்கட்டமாக இந்தத் திட்டம் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெரு போன்ற நாடுகளில் உள்ள பயனர்களிடம் சோதனை செய்த பிறகு உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism