Published:Updated:

`தமிழில் ஆந்தாலஜி படம்' - கைகோக்கும் முக்கிய இயக்குநர்கள்!

உ. சுதர்சன் காந்தி.

திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப்போல நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகும் படங்களுக்கும் சீரிஸ்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Gautham Menon - Vetrimaran - Vignesh Shivan - Sudha Kongara
Gautham Menon - Vetrimaran - Vignesh Shivan - Sudha Kongara

கொஞ்ச நாளைக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆந்தாலஜிப் படம் 'லஸ்டு ஸ்டோரிஸ்'. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான விக்கி கவுஷல், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிக்க கரண் ஜோஹர், ஜோயா அக்தர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட இயக்குநர்கள் இயக்கி இருந்தனர். நெட்ஃபிளிக்ஸ் இணையத்தில் இந்தப் படத்துக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதையடுத்து, தமிழில் உருவாகும் ஆந்தாலஜி படம் ஒன்றை வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நான்கு இயக்குநர்கள், ஒவ்வொரு கதையை எழுதி இயக்கவிருக்கின்றனர்.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

அதில் விக்னேஷ் சிவன் இயக்கும் போர்ஷனுக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி, பாலிவுட் நடிகையும் அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியுமான கல்கி கோச்லின் ஆகியோர் நடிக்கின்றனர். இதை முடித்துவிட்டு, லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கவிருக்கும் படத்துக்குச் செல்லவிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதேபோல், வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா ஆகியோர் தங்களுக்கான பகுதியை விரைவில் இயக்கவிருக்கின்றனர்.