Published:Updated:

KGF 2 ராக்கிங் ஸ்டார் யஷ் தாடியை எடுத்ததற்கு மனைவியின் ரியாக்ஷன்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

யஷ்

கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ், தனது தாடியை எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

KGF 2 ராக்கிங் ஸ்டார் யஷ் தாடியை எடுத்ததற்கு மனைவியின் ரியாக்ஷன்... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கே.ஜி.எஃப் படத்தின் நாயகன் யஷ், தனது தாடியை எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
யஷ்

'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் நடிகர் யஷ் நீண்ட தாடியுடன், மிரட்டும் மேனரிசத்துடன் மாஸாக நடித்திருந்தார். அவரின் கெட்டப் ரசிகர்களைக் கவரும் படி இருந்து அது ஒரு ட்ரெண்ட் செட்டராகவும் மாறியது. இந்நிலையில் யஷ் தனது தாடியை எடுக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொலியில் யஷ் தனது தாடியை எடுக்கத் தயாராகும் போது அவரது மனைவி ராதிகா பண்டிட் மகிழ்ச்சியாக அதை வரவேற்கிறார். இந்த வீடியோ இப்போது நடந்தது என்கிற ரீதியில் வைரலாகி வருகிறது. ஆனால், இது 2018-ம் ஆண்டில், யஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் தங்கள் முதல் குழந்தையான ஐராவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தபோது வெளியானது. அதாவது 'கே.ஜி.எஃப்' முதல் பாகம் வெளியானதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவம் இது. தற்போது யஷ் தன் தாடியை எடுக்கும் இந்த வீடியோ, பல மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism