Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

love

னூப் - தீப்தி, நிறைய சண்டையும் கொஞ்சம் காதலுமாக வாழும் தம்பதி. தான் கர்ப்பமானதை மருத்துவரிடம் உறுதிசெய்துவிட்டு வீடு வரும் தீப்திக்கும் அனூப்புக்கும் சண்டை ஏற்பட, அனூப் தீப்தியைக் கொலைசெய்துவிடுகிறார். மனைவியின் பிணத்தை வீட்டின் கழிவறையில் மறைத்துவைத்திருக்கும் வேளையில், மனைவியைச் சந்தேகப்படும் அனூப்பின் நண்பன் மற்றும் தன் காதலியுடன் இன்னொரு மணமான நண்பன் ஆகியோர் வருகிறார்கள்.

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

இடையில் தீப்தியின் அப்பாவும் அனூப்பைச் சந்திக்கிறார். இதுதான் கதை என்று நாம் நினைக்கும்போது கடைசி 20 நிமிடங்களில் கதையே தலைகீழாக மாறுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் நேர்மையுமே காதல் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது, காலித் ரஹ்மான் இயக்கியிருக்கும் இந்த ‘லவ்’ திரைப்படம். இடையில் கொஞ்சம் இழுத்தடித்தாலும் இறுதி ட்விஸ்ட்டுக்காக சகித்துக்கொள்ளலாம். சைனி டாம், ராஜிஷா விஜயன். கோகுலன், சுதி கோப்பா, வீணா நந்தகுமார் அனைவருமே தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

I CARE A LOT

ரிலிருக்கும் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் ‘சிறப்பான’ பணி செய்கிறார் ரோசாமண்ட் பைக். அதன் திரைமறைவில், அவர் தேர்ந்தெடுப்பது பணக்கார ஆதரவற்ற முதியவர்களும், அவர்களின் சொத்துகளும். அப்படி ஒரு பாட்டியை நீதிமன்றம் மூலம் பெற்று செட்டிலாக பிளான் செய்தால், வந்து தலைமேல் விழுகிறது வில்லங்கம். அடுத்தடுத்து நடப்பதை த்ரில்லர் காமெடியாகச் சொல்கிறது I CARE A LOT. வுடி ஆலன் படங்களில் அதிக கவனம் ஈர்க்கும் டியான் வெஸ்ட் இதில் ஆதரவற்ற பாட்டியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘அவன் வருவான்’ எனப் பாட்டி சொல்லும் காட்சி பியூர் வில்லித்தனம். டான் கதாபாத்திரத்தில், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புகழ் பீட்டர் டிங்க்லேஜ். வழக்கம்போல எல்லோரையும் தன் நடிப்பால் ஓவர்டேக் செய்கிறார் ரோசாமண்ட் பைக். கருணைக்கும் கரன்சிக்கும் சண்டையில், கரன்சி வெல்ல, பாவ பலன்கள் கூடிக்கொண்டு செல்கிறது. நாம் பார்க்கும் சில விஷயங்களின் வேறொரு கோணத்தை முன்வைக்கிறது இந்தத் திரைப்படம்.

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

Beginning

யெகோவாவின் சாட்சிகளின் வழிபாட்டுத் தலத்தைத் தீக்கிரையாக்கிவிடுகிறார்கள் சில வன்முறையாளர்கள். மதவழிபாடுகள் மிகுந்த ஒரு ஆணாதிக்கச் சமூகத்தின் சாட்சியங்களாய்ச் சுழல்கின்றன அடுத்தடுத்த காட்சிகள். அந்த வழிபாட்டுத் தலத்தின் தலைவர், பிரச்னைகளைச் சமாளிக்க மூத்தவர்களைச் சந்திக்கக் கிளம்பிவிடுகிறார். அவரின் மனைவி யானாவின் மன அழுத்தப் பிரச்னைகளும், அதைத் தொடர்ந்து அவருக்கு நடக்கும் கொடுமைகளும்தான் படம். இந்த ஜார்ஜிய மொழிப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக பெண் இயக்குநரான டியா குலும்பேகஷ்விலி. பெண்களுக்கு இருக்கும் மனரீதியான பிரச்னைகள் என்பதைக் கடந்து வித்தியாசமான ஒளிப்பதிவு, வசனங்களற்று நீளும் காட்சிகள், என டியாவின் திறமை படம் முழுக்கவே தெரிகிறது. இன்னும் இன்னும் பெண் இயக்குநர்கள், இந்தச் சமுதாயத்துக்கான சினிமாக்களைப் பேச வேண்டும் என்பதை மீண்டும் உணர வைக்கிறது `பிகினிங்.’

MOVIE
MOVIE
சினிமா விகடன் : OTT கார்னர்

The Map of Tiny Perfect Things

காலையிலிருந்து இரவுவரை நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும், அப்படியே அடுத்த நாளும் நடக்கும் டைம் லூப்பில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை காமெடியாகச் சொல்கிறது அமேசானில் வெளியாகியிருக்கும் The Map of Tiny Perfect Things திரைப்படம். உலகம் தொடர்ச்சியாக ஒரு நாளை மட்டுமே மறு ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாயகனும் நாயகியும் மட்டுமே. அவர்கள் கண் பார்வையில்படும், சின்னச் சின்னத் தவறுகளையும் சரி செய்ய நினைக்கிறார்கள். ஒரு நாளை முழுமையாக, எல்லாம் சரியாக இருப்பதுபோல் செட் செய்துவிட்டால், அங்கிருந்து தப்பித்துவிடலாம் என்பது நாயகனின் எண்ணம். வாழ்தல் என்னும் கலையில், முழுமையற்று நிற்பதுதான் முழுமை என்னும் தத்துவார்த்தத்தை காதல், பாசம், காமெடி என எல்லாம் கலந்துகட்டி எடுத்திருக்கிறார்கள். வீக் எண்டில் ஜாலியாகப் பார்க்க நல்லதொரு சினிமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism