Published:Updated:

சினிமா விகடன் : OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

சினிமா விகடன் : OTT கார்னர்

ஸ்ட்ரீம்பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

பிட்ட கதலு

நெ
ட்பிளிக்ஸ் ஒரிஜினல்ஸ் சார்பில் பாலிவுட் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ எடுத்து வெளியிட, தெலுங்கு சினிமா ‘பிட்ட கதலு’ (சின்னக்கதைகள்) மூலம் அதே மாடலில் நான்கு கதைகளை வெளியிட்டிருக்கிறது. பெண்களின் வழி காதலும், காமமும் சொல்வதுதான் இந்தக் கதைகளின் ஒற்றைப் பிணைப்பு.

SERIES
SERIES
சினிமா விகடன் : OTT கார்னர்

ராமுலா ~ தருண் பாஸ்கர்

தெ
லங்கானாவின் வறண்ட கிராமம் ஒன்றில் காதல் கண்ணை மறைக்க சுற்றிவருகிறது ஒரு ஜோடி. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த பையனின் அப்பா முன்னாள் எம்.எல்.ஏ. சாதியும் பொருளாதாரச் சூழலும் காதலைத் தடுக்க, அந்த ஜோடி பிரிய நேர்கிறது. இதைக் கேள்விப்படும் உள்ளூர் அரசியல்வாதி, இந்த ஜோடியைத் தன் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை திடுக் க்ளைமாக்ஸோடு சொல்லி முடிகிறது ராமுலா. கதைக்கரு அவசியம் பேசவேண்டியதுதான் என்றாலும் அதை ஹியூமராய் அணுக முயன்றிருப்பது, பெண்ணே பெண்ணை சுரண்டுகிறார் போன்ற சீரியல் ரக ஸ்டீரியோடைப் போன்றவை படத்தின் பலவீனங்கள்.

சினிமா விகடன் : OTT கார்னர்

மீரா ~ நந்தினி ரெட்டி

யது அதிகமுள்ள கணவர் தரும் பாலியல் தொல்லைகளுக்கும் அவர் எழுப்பும் சந்தேகங்களுக்கும் மொத்தமாய் முடிவு கட்ட நினைக்கிறார் இரண்டு குழந்தைகளின் தாயான மீரா. எழுத்தாளர் மீரா, அவரின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன செய்கிறார் என்பதுதான் இந்தப்படம். சந்தேகக்கண் கொண்டு எந்நேரமும் குடித்துத் தீர்க்கும் நபராக ஜகபதிபாபு. பெண்களே பொறாமைகொள்ளும் பேரழகியாக அமலா பால். ஜகபதி பாபுவைப் பழிவாங்க, ஒரு கணவன் என்ன சொன்னால் ஆணாதிக்கம் மொத்தமாய் நொறுங்கி நிலைகுலைவான் என்பதையறிந்து அதற்கேற்ப காய் நகர்த்துகிறார். குட்டி ஸ்டோரியில் வந்த நலனின் கதையும், ஃபிரெஞ்சு எழுத்தாளரான மாப்பாஸானின் சிறுகதையும் இதே ரகம் தான் என்றாலும் அமலா பாலின் நடிப்பால் ஈர்க்கிறார் மீரா.

சினிமா விகடன் : OTT கார்னர்

xLife ~ நாக் அஷ்வின்

ஸ்
ருதிஹாஸன் நடித்திருக்கும் xLife ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன். மனிதர்களை இணையம் மூலம் மாய உலகுக்குள் மூழ்கடித்து, அவர்களின் பணத்தையும் நேரத்தையும் சுரண்டுகிறார் சஞ்சித் ஹெக்டே. தொழில்நுட்பங்களின் விளைவால் உருவான சமூக ஊடகங்கள் எப்படி மனிதர்களின் அன்பை மொத்தமாய் உறிஞ்சி அவர்களை வெறும் உடல்களாக மாற்றிவிட்டது என்பதைச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர். பிரமாண்டமாக கதையை எடுத்திருக்கிறாரே தவிர, அதில் வரும் ட்விஸ்ட் எல்லாம், ‘இதை இட்லினு சொன்னா சட்னிகூட நம்பாது’ டைப்.

சினிமா விகடன் : OTT கார்னர்

பிங்கி ~ சங்கல்ப் ரெட்டி

துவும் மீரா போல் எழுத்தாளர் கதைதான். ஆனால், நாயகன் எழுத்தாளர். வெற்றிபெறாத நாயகனைவிட்டு முதல் மனைவி விலகி வேறு திருமணம் செய்துகொள்கிறார். இரண்டாம் திருமணமும் வெற்றியும் ஒருசேர நாயகனுக்கு வர, மீண்டும் நாயகனின் வாழ்வில் குறுக்கிடுகிறார் முதல் மனைவி. ‘காதல் மட்டுமல்ல, ஆசையும் அழிவற்றது’ என்பதற்காக திரைக்கதையை நான் லீனியர் வடிவத்தில் சொல்லி, குழப்பியிருக்கிறார் சங்கல்ப். இந்தத் தத்துவத்தைச் சொல்ல வேறு கதையைக்கூட தேர்வு செய்திருக்கலாம் என தோன்ற வைக்கிறது பிங்கி.

சினிமா விகடன் : OTT கார்னர்

த்ரிஷ்யம்-2

பெ
ரிதும் கொண்டாடப்பட்டு பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட மலையாள ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம்.

விட்ட அதே ஊரிலிருந்து, ஆனால் ஆறு ஆண்டுகள் கழித்து தொடங்குகிறது கதை. ஜார்ஜ்குட்டி இப்போது ஊருக்குள் ஒரு தொழிலதிபர். சொந்தமாய் தியேட்டர் வைத்திருக்கிறார். படம் ஒன்றைத் தயாரிக்கும் முடிவிலும் இருக்கிறார். அதற்கான டிஸ்கஷன் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் புதைத்து வைத்திருந்த பூதம் வெளிக்கிளம்பத் தயாராகிறது. பழசை மறக்காமல் நேரம் பார்த்துக் காத்திருக்கும் போலீஸுக்கு பெரிதாய் ஒரு க்ளூ கிடைக்க, அதை வைத்தே ஜார்ஜ்குட்டியை வளைக்கிறார்கள். ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல் கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறார் ஜார்ஜ்குட்டி. ஆனால், அதன்பின் நம் முன்னால் விரியும் பரபர ட்விஸ்ட்கள்தான் இந்த இரண்டாம் பாகத்தையும் ரசிக்க வைக்கிறது.

movie
movie

லாலேட்டன் நடிப்பைப் பற்றி இனி புதிதாய் என்ன சொல்லிவிடமுடியும்! அதிபுத்திசாலி காமன்மேனாய் பட்டாசு கொளுத்துகிறார் இந்த எவர்க்ரீன் யங்மேன். முடிச்சுகள் அவிழும் அந்தக் கடைசி தருணத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே நடைபோடும் அவரின் உடல்மொழி க்ளாஸ்! முதல் பாகத்தில் ஜார்ஜ்குட்டியின் குடும்பத்திற்கான வெளி, இந்தப் பாகத்தில் மிஸ்ஸிங். அதனாலேயே மீனா, அன்ஸிபா, எஸ்தர் ஆகிய மூவரும் ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்கள். இதர நட்சத்திரக் கூட்டத்தினிடையே ஐ.ஜி-யாக நடித்திருக்கும் முரளி கோபி தனித்துத் தெரிகிறார்.

சினிமா விகடன் : OTT கார்னர்

பகல் வெளிச்சத்தில் குடும்பத் திரைப்படமாகவும் இரவில் திக்திக் த்ரில்லராகவும் படத்தை மாற்றும் வித்தையை திறம்பட செய்கிறது சதீஷ் க்ரூப்பின் ஒளிப்பதிவு. படத்தின் பெரிய பலம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் எழுத்து. முதல்பாதி புள்ளிகளைக் கோடிட்டு, இரண்டாம் பாதியில் இணைக்கும் திரைக்கதையை எழுதிய விதத்தில் ‘அட’ சொல்ல வைக்கிறார். ஆனால் இவை அனைத்தும் கடைசி அரை மணி நேரம் மட்டுமே நிகழ்வதால் முதல் பாதி லேசாய் பொறுமையைச் சோதிக்கிறது. வரிசை கட்டி நிற்கும் ட்விஸ்ட்களில் கிட்டத்தட்ட பாதியை எளிதாக யூகித்துவிடலாம் என்பதும் மைனஸ்.

‘ஒரு சாமானியன் இவ்வளவு துல்லியமாய் திட்டம் தீட்டி அது நடக்கக் காத்திருக்கமுடியுமா’ போன்ற லாஜிக் கேள்விகள் படம் முடிந்தபின் நமக்குள் எழுந்தாலும் திரையில் நிகழும் லாலேட்டன் - ஜீத்து ஜோசப்பின் மேஜிக்கிற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism