Published:Updated:

OTT கார்னர்

OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

OTT கார்னர்

ஸ்டிரீம் பாய்

Published:Updated:
OTT கார்னர்
பிரீமியம் ஸ்டோரி
OTT கார்னர்
Alice in Borderland `உலகமே ஒரு விளையாட்டு மேடை. நாம் எல்லோரும் அதில் கேமர்கள்’ என்கிற அதிரிபுதிரி ஒன்லைனுடன் களமிறங்கி யிருக்கிறது அலைஸ் இன் பார்டர்லேண்டு தொடர்.
Web Series
Web Series
OTT கார்னர்

ஆள் அரவமற்ற டோக்கியோ நகரம், அங்கிருக்கும் காலியான கட்டடங்களில் நடக்கிறது உயிரைப் பணயம் வைத்தாடும் `வாழ்வா சாவா’ விளையாட்டுகள். இரவு நேரங்களில் நடக்கும் போட்டிகளில் வெல்பவர்களுக்கு ஃப்ரீ பாஸும், உயிரும் பரிசாகத் தரப்படும். இப்படியாக வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் மனிதர்கள், வேற லெவல் போட்டிகள், எமோஷனல் காட்சிகள் என பக்காவாக வெளியாகியிருக்கிறது இந்த ஜப்பானியத் தொடர். அடுத்த சீசனுக்கு நெட்ப்ளிக்ஸில் அப்ரூவல் வாங்கியிருக்கும் இந்தத் தொடர்தான் இளசுகள் மத்தியில் சமீபத்திய வைரல்.

ரேட்டிங் - 3/5

DocuSeries
DocuSeries
OTT கார்னர்

Earth at night in Color

ருள் சூழ்ந்த காடுகளின் இரவு எப்படியிருக்கும்? தொழில்நுட்ப உதவியுடன் காட்டியிருக்கிறது Earth at night in Color டாக்குமென்டரி தொடர். பறவைகள் இரவில் கூடடையும், மிருகங்கள் குகைக்குச் செல்லும் எனப் பாடப்புத்தகப் படிப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது தொடர். ஆம், வேட்டையோ, காதலோ எல்லாமே நடப்பது இரவின் மடியில்தான். காவல்தெய்வமாகக் கர்ஜிக்கும் ஆண் சிங்கம்; வேட்டையாடி வெறும் வயிற்றுடன் குட்டிகளைக் காக்கப் போராடும் பெண் சிங்கம்; இந்தப் பெரிய மிருகங்களுக்கிடையே ஆந்தைகளின் உணவு வேட்டையையும், கரையான்களின் தந்திர வேட்டையையும் இணைத்த விதத்தில் ஆச்சர்யப்படுத்துகிறது இந்தத் தொடர். ஆப்பிரிக்கா தொடங்கி தென்னமெரிக்கா வரை வெவ்வேறு நிலப்பரப்புகளில் நடக்கும் கதைகள், வித்தியாச விலங்குகள் எனத் தொழில்நுட்பம் மூலம் நாம் பார்த்திராத ஒரு உலகத்தை நம் கண் முன் விரிக்கிறது. ஆப்பிள் டிவியில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர் நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தரும்.

ரேட்டிங் - 4/5

Web Series
Web Series
OTT கார்னர்

Criminal Justice Behind Closed Doors

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக சமூகம் ஒன்றிணைந்து நிற்கும்போது, அதை எதிர்த்து அவரைக் காப்பாற்றப் போராடுகிறார் ஒரு சாதாரண வழக்கறிஞர். இதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Criminal Justice Behind Closed Doors தொடரின் ஒன்லைன். களம் முழுக்கவே புதியது என்பதால் முதல் பாகத்தைப் பார்க்க வேண்டியதில்லை என்பது கூடுதல் பிளஸ். ‘பிங்க்’ திரைப்படத்தைவிட இதில் கீர்த்தி குல்ஹரிக்கு, இன்னும் அழுத்தமான வேடம். பங்கஜ் திரிபாதியும், ஆசிஷ் வித்யார்த்தியும் கதைக்கு மேலும் கனம் சேர்த்திருக்கிறார்கள். ஆங்காங்கே திரைக்கதையில் ஏற்படும் தொய்வுதான் இதன் பலவீனம். மற்றபடி ‘பிங்க்’, ‘தப்பட்’ வரிசையில் பெண்களுக்கான சுயமான உணர்வுகளைப் பற்றிப் பேசிய விதத்திலும், குடும்ப அமைப்பின் மூலம் ஒரு பெண் எவ்வளவு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்பதை உரக்கச் சொன்ன விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தத் தொடர்.

ரேட்டிங் - 3.5/5

Movie
Movie
OTT கார்னர்

LEGO Star Wars Holiday Special

ஸ்டார் வார்ஸ் ரசிகர்களுக்காக, லெகோ பொம்மைகளின் வடிவத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம் ‘The Lego Star Wars Holiday Special’. ‘ரே’ ஜெடாய் பயிற்சிகளை ‘ஃபின்’னுக்கு வழங்கும்போது சில சவால்களை எதிர்கொள்கிறாள். பழைய ஜெடாய் புனிதப் புத்தகங்களிலும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஒரு புனித நாளில் பழைய ஜெடாய் ஆலயத்தில் அவளுக்குக் காலங்களைக் கடந்து பயணம் செய்ய உதவும் ஒரு சக்தி கிடைக்கிறது. ஜெடாய் குரு-சிஷ்யன் உறவுகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் பயிற்சி நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் முயலும் ‘ரே’ ஸ்டார் வார்ஸின் முக்கிய காலகட்டங்களில் பயணம் செய்து ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியா மொமண்ட்களை அள்ளி வழங்குகிறாள்.

ரேட்டிங் 3/5