சினிமா
Published:Updated:

OTT கார்னர்

Nobody sleeps in the  woods tonight 2
பிரீமியம் ஸ்டோரி
News
Nobody sleeps in the woods tonight 2

அருமையான குரல்வளம் கொண்ட ஒரு பெண்ணைத் தேடும் பயணத்தை விவரிக்கிறது முபியில் வெளியாகியிருக்கும் Hidden டாக்குமென்டரி.

OTT கார்னர்
OTT கார்னர்

Army of Thieves - Movie

இந்த ஆண்டு வெளியான Army of the Dead படத்தின் முன்கதையைச் சொல்கிறது Army of thieves. ஜோம்பிக்கள் அமெரிக்காவைச் சூழ ஆரம்பிக்க, சோம்பலாக ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார் செபஸ்டியன். கொரினா, பிராட் கேஜ், க்வென் குழுவில் எப்படி இணைந்தார் செபஸ்டியன், எப்படி இவர்கள் மூன்று கொள்ளைகளை மேற்கொண்டனர் என்பதுதான் மீதிக்கதை. Army of the dead-ல் லுட்விக் டீட்டராக வந்த மத்தியாஸ், இதில் செபஸ்டியனாக வருகிறார். க்வென்னாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் நத்தாலி எம்மானுவேல். ஜாக் ஸ்நைடர் எழுதிய படத்தை இயக்கி நடித்திருக்கிறார் மத்தியாஸ். காமெடிப் படமாக இருந்தாலும் எமோஷனல் கைகூடிய அளவு த்ரில்லரும் ஹெய்ஸ்ட்டும் சுவாரஸ்யம் இல்லை.

OTT கார்னர்
OTT கார்னர்

Hidden - Documentary

அருமையான குரல்வளம் கொண்ட ஒரு பெண்ணைத் தேடும் பயணத்தை விவரிக்கிறது முபியில் வெளியாகியிருக்கும் Hidden டாக்குமென்டரி. அந்தக் கிராமத்தில் அந்தப் பெண் பாடுவது சபிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தப் பெண்ணைத் தேடும் பயணத்தைத் தன் மகள் சொல்மாஸ் பனாஹியுடன் மேற்கொள்கிறார் ஈரானிய இயக்குநரான ஜாஃபர் பனாஹி. 2010-ம் ஆண்டிலிருந்து ஜாஃபர் பனாஹிக்குத் திரைப்படங்களை இயக்கத் தடை விதித்திருக்கிறது ஈரானிய அரசு. அதன் பின் அவர் எடுக்கும் படங்கள் யாவுமே, தடையை மீறி எடுக்கப்பட்டவை. பழைமைவாதம் சூழ்ந்திருக்கும் ஒரு தேசத்தைப் பார்த்து பனாஹி மீண்டுமொரு முறை நக்கலாகச் சிரித்திருக்கிறார்.

OTT கார்னர்
OTT கார்னர்

Nobody sleeps in the woods tonight 2 - Movie

Teen Slasher ஜானர் மினிமம் கியாரன்டி என்பதால் வரிசையாக அதில் படங்களை இறக்கிக்கொண்டே இருக்கிறது நெட்ப்ளிக்ஸ். இந்த வார வரவு இது. கடந்த ஆண்டு வெளியான முதல் பாகத்தில் நிறையவே Hills have eyes, Wrong turn போன்ற படங்களின் சாயல் இருந்தது. அதனாலோ என்னவோ இந்தமுறை அப்படியே எதிர்த்தரப்பிலிருந்து கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதுவே படத்தின் பெரிய பிரச்னையாகவும் மாறிவிட்டது. முழுக்க ரத்தம் தெறிக்கும் ஹாரர் படமாகவும் இல்லாமல், எதனால் கொலை செய்கிறார்கள் என்கிற காரணத்தை ஆராயும் படமாகவும் இல்லாமல் பாதியில் நிற்கிறது. முதல் பாகத்தின் கதாநாயகியான ஜூலியாவிற்கு இதில் பெரிதாக வெளி இல்லாததால் படமும் தேங்கிவிடுகிறது. வார இறுதியில் சும்மா தெறிக்கத் தெறிக்க ஒரு படம் பார்க்கவேண்டும் என்கிற ஹாரர் விரும்பிகளுக்கு இந்தப் படம் ஓரளவிற்கு திருப்தியளிக்கலாம். ஆனால் நிச்சயம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே!

OTT கார்னர்
OTT கார்னர்

Just beyond - series

டீனேஜர்களைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்னக் கதைகளைச் சொல்லி அசத்துகிறது ஹாட்ஸ்டாரில் வெளிவந்திருக்கும் Just beyond தொடர். R.L.Stine எழுதிய Just beyond சிறுகதைகளை மையப்படுத்தி இந்த 8 காமெடி ஹாரர் குறும்படங்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இளம் போராளியை மூளைச் சலவை செய்ய முடிவு செய்கிறது முதல் கதை. எட்டில் We’ve Got Spirits, Yes We Do செம காமெடி ரகம், The Treehouse சின்ன சர்ப்ரைஸ் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். டீன் சிறுவர்கள் பார்க்க வேண்டிய ஜாலியான ஹாரர் கதைகள் இவை.