Published:Updated:

`` `ஏலே... இதைக் கேட்டேலா'ன்னு அவர் சிரிச்சா..!" - நெல்லை சிவா நினைவுகள் பகிரும் சுஜிதா

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்
News
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்

நெல்லை சிவா கடைசியாக `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துவந்தார். அந்த சீரியலின் நாயகி சுஜிதாவிடம், அவரின் நினைவுகள் குறித்துப் பேசினோம்.

Published:Updated:

`` `ஏலே... இதைக் கேட்டேலா'ன்னு அவர் சிரிச்சா..!" - நெல்லை சிவா நினைவுகள் பகிரும் சுஜிதா

நெல்லை சிவா கடைசியாக `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்துவந்தார். அந்த சீரியலின் நாயகி சுஜிதாவிடம், அவரின் நினைவுகள் குறித்துப் பேசினோம்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்
News
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், திரை நட்சத்திரங்களையும் பல்வேறு காரணங்களால் இழந்து வருகிறோம். விவேக், கே.வி.ஆனந்த், பாண்டு உள்ளிட்ட பிரபலங்கள் மறைவால் வாடும் தமிழ் சினிமாவுக்கு, நடிகர் நெல்லை சிவாவின் மரணமும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவருக்கு, வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் அடையாளம் பெற்றுத்தந்தன. அதிலும், `கெணத்த காணோம்' காமெடி வெகு பிரபலம். நெல்லை சிவா கடைசியாக `பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலின் நாயகி சுஜிதாவிடம், அவரின் நினைவுகள் குறித்துப் பேசினோம்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்

``நடிப்புத் தொழில்ல அவருக்குப் பெரிய ஈடுபாடு உண்டு. சினிமா, சீரியல்னு பாகுபாடு இல்லாம வேலை செய்வார். அவருடன் எனக்குப் பல வருஷ நட்பு உண்டு. ஆனா, இந்த புராஜெக்ட் மூலமாதான் சிவா அண்ணனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது. ஷூட்டிங் வந்தா, தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பார். எங்க டீம்லயே அவர்தான் சீனியர். எல்லாக் கலைஞர்கள்கிட்டயும் பாகுபாடு இல்லாம பழகுவார்; பாராட்டுவார். கிராமத்துப் பண்புடன் எல்லோர்கிட்டயும் நெல்லைத் தமிழ்ல கலகலப்பா பேசுவார்.

`ஏலே... இதைக் கேட்டேலா'ன்னு தனக்குத் தெரிஞ்ச தகவலை, தன்னோட பாணியில சொல்லி எல்லோரையும் சிரிக்க வைப்பார். அவரோட சிரிப்பு கணீர் குரல்ல கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். அவர் சிரிச்சா டீம்ல எல்லோருக்கும் கேட்கும். அதை வெச்சே அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சுடலாம். மத்தவங்க டயலாக் பேசுறத்துக்கும், தன்னைப் போல இயல்பான உடல்மொழியில பேசச் சொல்லிக்கொடுப்பார். தன்னால ஷூட்டிங் பாதிக்கக்கூடாதுனு நினைப்பார். சரியான நேரத்துக்கு ஷூட்டிங் வந்தாலும், எவ்வளவு நேரம் ஆனாலும் நடிச்சுக் கொடுத்துட்டுத்தான் போவார். தான் வசிச்ச நெல்லையில இருந்து, நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு மாறி மாறி பயணிச்சார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல்

சோர்வடையாம ஆக்ட்டிவ்வா வேலை செய்வார். இதைப் பத்தி பெருமையா எங்க டீம்ல பேசுவோம். போன வாரம்கூட ஷூட்டிங்ல பேசினோம். இப்போ ஊரடங்கு இருக்கிறதால சில நாள்களா ஷூட்டிங் நடக்கல. நல்லாதான் இருந்தார். மாரடைப்பால உயிரிழந்துட்டார்னு தகவல் கிடைச்சதும் அதிர்ச்சியா இருந்துச்சு. கொரோனா சூழலால நேர்ல போய் அவருக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைக்கல. அவரோட உடல் வைக்கப்பட்டிருந்த வீடியோ காட்சிகளை அவர் ஊர்ல இருந்து எங்க டீமுக்கு அனுப்பியிருந்தாங்க. கண்ணீர் விட்டு அவருக்காக வேண்டிகிட்டேன்" என்று சோகத்துடன் முடித்தார்.