Published:Updated:

பரவையில் இருந்து பறந்த பறவை!

பரவை முனியம்மா
பிரீமியம் ஸ்டோரி
பரவை முனியம்மா

ஆடியோ கேஸட்டின் ஆளுமை அதிகமாக இருந்த காலத்தில் இவரின் பாடல்கள் பதியப்பட்ட கேஸட்டுகளுக்கு செம டிமாண்ட்.

பரவையில் இருந்து பறந்த பறவை!

ஆடியோ கேஸட்டின் ஆளுமை அதிகமாக இருந்த காலத்தில் இவரின் பாடல்கள் பதியப்பட்ட கேஸட்டுகளுக்கு செம டிமாண்ட்.

Published:Updated:
பரவை முனியம்மா
பிரீமியம் ஸ்டோரி
பரவை முனியம்மா
நாட்டுப்புற இசை ரசிகர்களுக்குப் பரவை முனியம்மா தோற்றமும் குரலும் ஏற்கெனவே பரிச்சயமாகியிருந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அவரைக் கொண்டுபோய்ச் சேர்த்தது ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன்தானே’ பாடல்தான்.

ஏராளமான மேடைக் கச்சேரிகளில் தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்த இவருக்கு மதுரை வட்டாரத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பரவை முனியம்மா கச்சேரி என்றால் அங்கு வழக்கத்துக்கு மாறான கூட்டம் கூடும். விவேக்கோடு சேர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக்காட்சிகள் பல இன்றளவும் நகைச்சுவை சேனல்களின் விஷ் லிஸ்ட்டில் இருக்கின்றன. ஆடியோ கேஸட்டின் ஆளுமை அதிகமாக இருந்த காலத்தில் இவரின் பாடல்கள் பதியப்பட்ட கேஸட்டுகளுக்கு செம டிமாண்ட்.

பரவை முனியம்மா
பரவை முனியம்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகைச்சுவை, நாட்டுப்புறப் பாடல்கள் என பரவை முனியம்மா மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். தவிர, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவர் நடத்திய சமையல் நிகழ்ச்சியும் பாப்புலர். தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது கொடுத்து கெளரவித்தது. மக்களைத் தன் இசையாலும் நடிப்பினாலும் சந்தோஷப்படுத்திய இவரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இல்லை என்பதுதான் சோகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார் முனியம்மா. அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். இதற்கிடையில் பல முறை அவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் வந்தன. இந்த முறையும் அது வதந்தியாகத்தான் இருக்கும் என்று நம்பியவர்களுக்கு அவரது இறப்பு பெரிய ஏமாற்றம்தான்.

பரவையில் இருந்து பறந்த பறவை!

‘பரவை’ முனியம்மா குறித்து, அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் தரணியிடம் பேசினேன். “அவங்களை ஆடிஷன் பண்ணியபோதே அவங்க ஒரு ஸ்டார்னு தெரிஞ்சுடுச்சு. செம டைமிங் சென்ஸ் உள்ளவங்க. முதல் நாள் ஷூட்டிங் அன்னைக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தாங்க. அடுத்த நாள்ல இருந்து ரொம்ப இயல்பாகிட்டாங்க. நல்லா ஞாபகம் இருக்கு, ஜோதிகாகிட்ட, “ஏம்மா... டைரக்டர் இங்க வந்து நிக்கச் சொல்றாரும்மா... நீ ஏன் அங்க நிக்குற... இங்க வா அப்போதான் படம் பிடிக்க சரியா இருக்கும்”னு சொன்னாங்க. அப்படி ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக்கொடுத்தவங்க அவங்க. ‘நான் இப்போ என்ன பண்ணணும் தம்பி?’ன்னு கேட்பாங்க. நாம சொல்றதை அழகா அவங்களுக்கான குழந்தைத்தனத்தோடு சூப்பரா பண்ணி அசத்திடுவாங்க. ஏகப்பட்ட பாடல்களை மனப்பாடம் செஞ்சு மனசுல வெச்சுப் பாடுறதனால எவ்வளவு பெரிய வசனமா இருந்தாலும் அசால்ட்டா பேசிடுவாங்க. மனுஷன் ஜெயிக்க முடியலையேன்னு ஒரு கட்டத்துல மனசைத் தளர்த்திடுறான். ஆனா, அவங்க அத்தனை வயசு வரைக்கும் இந்தப் புகழுக்காகக் காத்திருந்தாங்க. அந்தப் பொறுமையை அவங்ககிட்ட இருந்து எல்லோரும் கத்துக்கணும்” என்றார்.