Published:Updated:

“மக்கள் பணியும் மகத்தான கலைதான்!”

பகுருதீன்
பிரீமியம் ஸ்டோரி
பகுருதீன்

கலை மக்களுக்காக’ என்ற உயிரோட்டமான வார்த்தைகளுக்கு உதாரணம் இந்தக்குழு!

“மக்கள் பணியும் மகத்தான கலைதான்!”

கலை மக்களுக்காக’ என்ற உயிரோட்டமான வார்த்தைகளுக்கு உதாரணம் இந்தக்குழு!

Published:Updated:
பகுருதீன்
பிரீமியம் ஸ்டோரி
பகுருதீன்
லையும் களப்பணியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை” என்கிறார் நாடகக் கலைஞர் பகு என்கிற பகுருதீன். மீனவர்கள் பிரச்னை தொடங்கி LGBT விஷயம் வரை களத்தில் நின்று குரல் கொடுக்கும் பகுருதீன் குழுவினர் இதுவரை 600க்கு மேற்பட்ட, உரிமை கோரப்படாத பிணங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறார்கள்.

“கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். 2015-ல சென்னைக்கு வந்ததுல இருந்து நாடகங்கள் இயக்குறேன். ‘திணைநிலவாசிகள்’ என்ற நாடகக்குழு வச்சிருக்கேன். இங்க இருக்கிற நாடகக்குழுக்கள் நோக்கம் என்னன்னே எனக்குத் தெரியல. அத சினிமாவுக்கான ஒரு பாதையாக மட்டும்தான் பாக்குறாங்களோன்னு தோணுச்சு.

“மக்கள் பணியும் மகத்தான கலைதான்!”

நாடகத்தால கிடைக்கிற பணம் மக்கள் பணம். அப்ப நாடகம் யாரோட குரலா இருக்கணும்ன்ற கேள்வி எனக்குள்ள எழுந்துச்சு. நாடகக் கலைஞர்களுக்கு மக்கள பத்தியும் அவங்க வாழ்க்கை, பிரச்னைகள் பத்தின அறிவும் இருக்கணும். அப்பதான் அவங்க எங்க போனாலும் சரியான குரலைப் பதிவு செய்வாங்கன்னு நினைக்கிறேன். அந்தப் புள்ளியில்தான் இந்த நாடகமும் சமூகப்பணியும் சேர்ந்த பயணம் ஆரம்பமாச்சு” என்கிறார் பகு.

சமீபத்தில் நடிகர் நாசரின் நடிப்பில் ‘பாப்லோ நெரூடா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கும் பகுவின் நாடகக் குழுவில் 30 கலைஞர்கள் இருக்கிறார்கள். பகுவைத் தவிர மற்றவர்கள் வேலைக்குச் செல்பவர்கள். தினமும் காலையில் 6-8 சந்திக்கிறார்கள். நாடக ஒத்திகைகள் மேற்கொள்கிறார்கள். பின் அலுவலகம் சென்றுவிட்டு திரும்பவும் மாலை 7 மணிக்கு மேல் கூடி நாடக வேலைகளோ அல்லது சமூகப் பணிகளோ செய்கிறார்கள்.

பகுருதீன்
பகுருதீன்

‘‘எங்களோட நாடகங்கள் எல்லாமே மீனவப் பிரச்னைகள் உட்பட பல தரப்பு மக்களோட பிரச்னைகளை மையப்படுத்திதான் இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு சென்ற வாரம் உணவுகள் கொடுத்தோம். அதோட நிக்காம அவங்களுக்காகப் பாட்டு பாடினோம்; நாடகம் போட்டோம். அங்க நாடகமும் சமூகப் பணியும் ஒன்றிணைஞ்சிடுச்சு” என்பவர் ஒரு சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தப்ப அசாமைச் சேர்ந்த ஒருவர் இங்க இறந்துட்டாரு. அவர் உடலை அசாமுக்குக் கொண்டு போக முடியாத சூழல். 5 நாள் மார்ச்சுவரில வச்சிருந்தோம். அவரோட பையனுக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டு இங்க வரவைச்சோம். எல்லாம் பண்ணி, சுடுகாட்டுக்குக் கொண்டு போனா ஆதார் கார்டோ வாக்காளர் அடையாள அட்டையோ இல்லாம எதுவும் செய்ய முடியல. அந்தப் போராட்டத்தோட வீரியத்தை இந்தச் சம்பவம் எளிமையா சொல்லிடுச்சு. அதனால்தான் யாரா இருந்தாலும் அவர்களுக்கு இறுதி மரியாதை முக்கியம்னு நாங்க நினைக்கிறோம். அதனால எல்லாரையும் உரிய மரியாதையுடன் அடக்கம் பண்றோம். இதுவரை 600 பேருக்கு அந்த மரியாதையைக் கொடுத்திருக்கோம்’’ என்றார் பகு.

‘கலை மக்களுக்காக’ என்ற உயிரோட்டமான வார்த்தைகளுக்கு உதாரணம் இந்தக்குழு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism