Published:Updated:

“என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து நடிக்க சிலர் பயப்படுகின்றனர்" - பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

தனது அரசியல் கருத்துக்களால் திரையுலகில் உள்ள சிலரால் அவர் புறக்கணிக்கப்படுவதாகப் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.

“என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து நடிக்க சிலர் பயப்படுகின்றனர்" - பிரகாஷ் ராஜ்

தனது அரசியல் கருத்துக்களால் திரையுலகில் உள்ள சிலரால் அவர் புறக்கணிக்கப்படுவதாகப் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.

Published:Updated:
பிரகாஷ் ராஜ்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து  மொழிகளிலும்  பிரபலமானவர்,  நடிகர்  பிரகாஷ் ராஜ். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும்  இருக்கின்றார். சில படங்களை  அவரே இயக்கி நடித்தும் உள்ளார்.

இதனிடையே  பிரகாஷ் ராஜ் சமீப காலங்களில் அரசியல் தொடர்பான சில விஷயங்களைப் பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசுக்கு  எதிராக சமூகவலைதங்களில் தனது கருத்துக்களை அவ்வப்போது பதிவிட்டும் வருகிறார்.  

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது அரசியல் கருத்துக்களால் திரையுலகில் உள்ள சிலரால் அவர் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுத்தொடர்பாக  பேசிய அவர், “என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது என்னுடன் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

 பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

அவரோடு நடிக்க வேண்டாம் என்று  யாரும் கூறவில்லை. ஆனால், நான் அரசியல் பேசுவது அவர்களுக்கு ஒரு வித பயத்தை உண்டாக்குகிறது.  இதனால் என்னுடன் சேர்ந்து நடிக்க சிலர் மறுக்கின்றனர். அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் எந்த விளைவுகளையும் சந்திக்க நான் தயாராகதான் இருக்கிறேன். சில நடிகர்கள்,  அரசியல் மற்றும் சமூகம் குறித்து பேசாமல் அமைதி காக்கிறார்கள். அவர்களை நான்  குறைக்கூற  விரும்பவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.