Published:Updated:

“ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

இயக்குநர் பி.வாசு.
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பி.வாசு.

மனசே மனசே...

“ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

மனசே மனசே...

Published:Updated:
இயக்குநர் பி.வாசு.
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் பி.வாசு.

‘பன்னீர் புஷ்பங்கள்’ தொடங்கி ‘சின்னதம்பி’, ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘சந்திரமுகி’, ‘சிவலிங்கா’ உட்பட 65 படங்களை இயக்கி, திரைத்துறையில் தனி அடையாளம் பதித்திருப்பவர் பி.வாசு. ஒரு தெலுங்குப்பட இயக்கத்துக்கான வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம், ``மன அழுத்தம் ஏற்படும்போது அதை எப்படிக் கையாள்கிறீர்கள்?’’ என்று கேட்டோம்.

``ஸ்ட்ரெஸ்ஸை தலையில சுமக்கிறதும் தூக்கிப்போடுறதும் நம்ம கையிலதான் இருக்கு. ஸ்கூல்ல படிக்கும்போது திங்கள்கிழமை வந்தா ஸ்ட்ரெஸ் ஆரம்பிச்சிடும். ‘கையெழுத்து நோட்டு, கட்டுரை நோட்டு, வீட்டுப்பாடம்’னு ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ். சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவுல அந்த ஸ்ட்ரெஸ் காணாமப்போயிடும். சின்ன வயசுல ஸ்ட்ரெஸ்னா என்னன்னு தெரியாது; வளர்ந்த பிறகுதான் தெரியுது. அதுதான் வித்தியாசம். ஒருதடவை டாக்டர்கள் கருத்தரங்கம் ஒண்ணுல பேசப் போயிருந்தேன். அங்கே மனநல மருத்துவர்கள் பலர் வந்திருந்தாங்க. அப்போ ஒரு டாக்டர், ‘சந்திரமுகி’ படத்துல வடிவேலு மனசுல நினைக்கிறதை வெளியில சொல்ற ரஜினி சார் கதாபாத்திரம் பற்றிப் பேசினார். ‘’நாங்கல்லாம் மனநல மருத்துவத்துல எவ்வளவோ பார்த்திருக்கோம். அடுத்தவங்க மனசுல இருக்குற விஷயத்தை எப்படிக் கண்டுபிடிச்சு சொல்ல முடியும்?’னு கேட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அடுத்தவங்க மனசுல இருக்கிறதை யாராலும் கணிச்சு சொல்ல முடியாது. ஆனா, ரஜினி மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ அப்படிச் சொன்னால், தியேட்டர்ல ‘அப்ளாஸ்’ வாங்கும்னுதான் இது மாதிரி காட்சிகளை வைக்கிறோம். இயக்குநர்களும் ஒரு வகையில ‘சைக்யாட்ரிஸ்ட்ஸ்’தான். தினமும் பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஹீரோ, ஹீரோயின், கேமராமேன், யூனிட்ல உள்ளவங்கனு ஒவ்வொருத்தரோட உளவியலையும் புரிஞ்சிக்கிட்டாதான் ஷூட்டிங்கை நல்லபடியா முடிக்க முடியும்’னு பேசினேன்.

 “ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

ஷூட்டிங்ல ஏகப்பட்ட டென்ஷன் உண்டாகும். ஷூட்டிங் முடிஞ்சதும் ஆறு மணிக்கு ‘பேக்-அப்’ சொல்லிட்டு, நேரா ஜிம்முக்குப் போயிடுவேன். செல்போனை ஆஃப் பண்ணிட்டு ட்ரெட்மில்லுல நடைப்பயிற்சி, பிறகு உடற்பயிற்சினு இரண்டு மணி நேரம் வேற எந்தச் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 வருஷமா இந்தப் பழக்கம் இருக்கு. மன அழுத்தத்தைப் போக்குறதுக்கு இது எனக்கு ரொம்ப உதவியா இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நேரங்கள்ல ரொம்ப டென்ஷனா இருந்தா, மனசை அமைதிப்படுத்த மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், இல்லைனா வீட்டுப் பக்கத்துல இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் பேசாம உட்கார்ந்திருப்பேன். எனக்கு எப்போ புறப்படணும்னு தோணுதோ அப்போ புறப்படுவேன். 38 வருஷமா சபரிமலைக்கு போயிட்டிருக்கேன். அந்த நாள்கள்ல விடியற்காலையில குளிச்சிட்டு, கோயிலுக்குப் போயிட்டு வந்து விரதம் இருக்கும்போது மனசு, உடம்பு ரெண்டும் உற்சாகமாயிடும். ‘எங்கேயாவது ஓடலாமா... மலை ஏறலாமா?’னு உடம்பு ‘பரபர’னு இருக்கும். கொஞ்ச நாள் ஓடினாலே காரை பட்டறைலவிட்டு சுத்தம் பண்ணி ‘பட்டி, டிங்கரிங்’ பார்த்து அதுக்கப்புறம்தான் ஓட்டுறோம். நம்ம உடம்பும் அது மாதிரிதான். வருஷம் பூரா ஓடிக்கிட்டே இருந்ததுக்கு 40 நாள் விரதமிருந்தா ஆரோக்கியமாகிடும். மனசும் ரொம்ப லேசாகிடும்.

ரஜினி சார் ஒருதடவை ‘நீங்க ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு என்ன பண்ணுவீங்க?’னு கேட்டார். நான் இந்த விஷயங்களையெல்லாம் சொன்னேன். அவர் ‘அதுக்கு பதிலா நீங்க படிச்ச ஸ்கூலுக்குப் போயிட்டு வாங்க’னு சொன்னார். அதே மாதிரி செஞ்சேன். அங்கே போனதும் மனசுல என்னென்னவோ எண்ணங்கள்... யூனிஃபார்முல இருந்த நாள்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், இப்போ நான் அடைஞ்சிருக்கிற இடம், அதில் வந்தத் தடைகள், அவற்றைத் தாண்டிய விதம் எல்லாம் மனசுல வந்து மனபாரத்தை மொத்தமா இறக்கிடுச்சு.’’ அனுபவம் சொல்லிக் கிளம்பினார் இயக்குநர் பி.வாசு.

 “ரஜினி சொன்ன ரகசியம்!” - இயக்குநர் பி.வாசு

இயக்குநர் பி.வாசுவின் விரிவான பகிர்வு இங்கே...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism