Published:Updated:

"எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!" - கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா குடும்பம்

ரம்பா, அவரது குழந்தை சாஷா

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துகுள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!" - கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா குடும்பம்

நடிகை ரம்பா குழந்தைகளுடன் சென்ற கார் விபத்துகுள்ளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரம்பா, அவரது குழந்தை சாஷா

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து, தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தைத் திரட்டியவர். இவர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, லாவன்யா மற்றும் சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது ரம்பா, கனடாவில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்பா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கனடாவில் குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக நடிகை ரம்பா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் "பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது சிறு காயங்களுடன் உயிர் தப்பி நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், என் சிறிய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். மோசமான நாட்கள். மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.