Published:Updated:

சமந்தாவின் `யசோதா' பட டிரெய்லரை வெளியிட உள்ள 5 மொழி முன்னணி ஹீரோக்கள் இவர்கள்தான்!

யசோதா ( NGMPC181 )

சமந்தாவின் யசோதா திரைப்படத்தின் டிரெய்லரை தமிழ் தெலுங்கு , கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி ஹீரோக்கள் இன்று மாலை வெளியிட உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘யசோதா'. தமிழ், தெலுங்கு. கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஹரி & ஹரிஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

5 மொழி முன்னணி ஹீரோக்கள்
5 மொழி முன்னணி ஹீரோக்கள்

இப்படம் நவம்பர் 11 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று (27.10.2020 ) மாலை வெளியாக உள்ளது. ‘பான் இந்தியா’ படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி ஹீரோக்கள் வெளியிட உள்ளனர்.

அந்தவகையில் தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஹிந்தியில் வருண் தவான் ஆகியோர், சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் டீசரை வெளியிடுகிறார்கள். இப்படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.