Published:Updated:

சங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்

சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்

ராபர்ட் சற்குணத்தின் சுமாரான இசை, ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் சராசரியான ஒளிப்பதிவு ஆகியவை படம் பார்க்கும் நிகழ்வைக் கொஞ்சம் அயர்ச்சிக் குள்ளாக்குகின்றன.

சங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்

ராபர்ட் சற்குணத்தின் சுமாரான இசை, ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் சராசரியான ஒளிப்பதிவு ஆகியவை படம் பார்க்கும் நிகழ்வைக் கொஞ்சம் அயர்ச்சிக் குள்ளாக்குகின்றன.

Published:Updated:
சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம்
ரிமைக்காக முதலாளித்து வத்தை எதிர்த்துப் போராடும் சிவப்புச் சட்டைப் பாட்டாளிகளின் கதையே இந்த ‘சங்கத்தலைவன்.’

கொங்கு மண்டலத்தில் தறி நெசவாலையில் வேலை பார்க்கிறார் பயந்தாங்கொள்ளி கருணாஸ். முதலாளி முன் அதிர்ந்து பேசினாலே பாவம் என்கிற அளவுக்குக் கோழை. முதலாளியின் அலட்சியத்தால் ஆலையில் ஒரு அசம்பா விதம் நடக்க, மனம் பொறுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாய் நிற்கிறார் கருணாஸ். இதனால் முதலாளியோடு முட்டிக்கொள்ள, உள்ளூர்த் தொழிற்சங்கத் தலைவர் சமுத்திரக்கனியின் ஆதரவு கருணாஸுக்குக் கிடைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் பொதுவுடமைக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு கருணாஸ் போராட்டக் களத்தில் தலைவனாக உருவாக, அவரின் எதிரிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. போராட்டமும் உதிரமும் சேர்த்து களத்தை இன்னும் சிவப்பாக மாற்ற, முடிவை நோக்கி நகர்கிறது கதை.

சங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்

ஆர்ப்பாட்டமே இல்லாத, ஆனால் அத்தனை உணர்ச்சிகளையும் காட்டவேண்டிய பாத்திரம் கருணாஸுக்கு, முதலாளியின் ஏவல் ஏமாளியாய் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நட்பின் வழி, புத்தகங்களின் வழி தனக்கான நியாயத்தைக் கண்டடையும் இயல்பான வரைவில் அப்படியே பொருந்திப் போகிறார். வழக்கமாய் இத்தகைய கதைகளில் அதிகம் உபதேசிக்கும் சமுத்திரக்கனியும் தன் பங்கைக் குறைத்து அவருக்கு வெளி தர, படம் முழுக்க நிறைந்திருக்கிறார் கருணாஸ்.

கருணாஸின் மீது காதல் கொள்ளும் சுனு லட்சுமி இயல்பான வெகுளிப் பெண்ணாய் மனம் கவர்கிறார். சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் ரம்யாவும் யதார்த்தமான அடுத்தவீட்டுப் பெண்ணாய்த் தோன்ற, படத்தோடு ஒன்றிப் போவது நமக்கு எளிதாகிறது. மாரிமுத்து, பாலாசிங், ஜூனியர் பாலையா போன்ற வர்களும் தன் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ராபர்ட் சற்குணத்தின் சுமாரான இசை, ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் சராசரியான ஒளிப்பதிவு ஆகியவை படம் பார்க்கும் நிகழ்வைக் கொஞ்சம் அயர்ச்சிக் குள்ளாக்குகின்றன.

சங்கத்தலைவன் - சினிமா விமர்சனம்

நாவலைப் படமாக்குவது ஒரு கலை. அந்தவகையில், ‘தறியுடன்’ நாவலை உணர்ச்சிபூர்வமான விறுவிறுக் காட்சிகளாக மாற்றி வெற்றிபெற்றிருக்கும் மணிமாறன், அதைக் கோவையான படமாய் மாற்றுவதில் இயக்குநராய்த் தடுமாறுகிறார். இதனால் தனித்தனிக் காட்சிகளாகவே படம் நின்றுவிடுகிறது. தூய லட்சியவாதியாக கருணாஸ் கதாபாத்திரத்தை வடிவமைக்காமல் குறைகளோடு எளிய மனிதனாய் சித்திரித்திருப்பதற்கு மணிமாறனுக்குப் பாராட்டுகள். அதற்கு சரியான உதாரணம், சாதியைப் பற்றி அவரும் அவர் தங்கையும் பேசிக்கொள்ளும் காட்சி.

பல உண்மைச் சம்பவங்களைக் கண்முன் நிறுத்தும் காட்சியமைப்புகள் படத்தின் பலம். ஆனால் ஆங்காங்கே பிரசார நெடி தூக்கல். அதைமட்டும் குறைத்திருந்தால் ஓங்கி ஒலித்திருக்கும் இந்தச் சங்கத்தலைவனின் குரல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism