Election bannerElection banner
Published:Updated:

``எனக்காக அவங்க யாரும் வரல; ஆனா, விவேக் சார் வந்தார்!" - சின்னத்திரை நடிகைகளின் புகழஞ்சலி

Vivek
Vivek

``ஹெல்த் விஷயத்துல விவேக் சார் ரொம்ப பர்ஃபெக்ட்டான மனிதர். யோகா செய்வார், வாக்கிங் போவார், சைக்கிளிங் போவார், பிராணாயாமம் செய்வார். பிராணாயாமம் செய்றவருக்கு இதயத்துல அடைப்பு, ஹார்ட் அட்டாக் அப்படிங்கிறதை என்னால நம்பவே முடியலை."

`விழித்துக்கொண்டிருக்கும்போதே கண்களைப் பறித்ததுபோல' என்பார்கள் பெரியவர்கள். நடிகர் விவேக்கின் மரணமும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்னால் மாஸ்க் மறைத்த பாதி முகத்தைத் தாண்டி முழு புன்னகையை சிந்தியவருக்கு இப்போது உயிர் இல்லை. விரல்களுக்கிடையில் வழிந்தோடும் நீரைப்போல சில மணி நேரத்தில் மாரடைப்பு, எக்மோ, கவலைக்கிடம், மரணம் என்று தன் குடும்பத்தையும் ரசிகர்களையும் தான் வளர்த்த மரங்களையும் விட்டுவிட்டு சென்றே விட்டார் நடிகர் விவேக். இந்தக் கண்ணீர் தருணத்தில் அவருடன் நடித்த சின்னத்திரை நடிகைகள் சிலரிடம் விவேக்கின் நினைவுகள் குறித்து உரையாடினோம்.

``பிராணாயாமம் செய்றவருக்கு இதயத்துல அடைப்பா?''
சோனியா போஸ் வெங்கட்
சோனியா போஸ் வெங்கட்
சோனியா போஸ் வெங்கட்

``நான் அவர்கூட நடிக்கிறதுக்கு முன்னாடியே அவருடைய ஃபேன். ரொம்ப அர்த்தமா இருக்கும் அவருடைய காமெடியெல்லாம். ரொம்ப நாலெட்ஜான நபர். இன்டலெக்சுவல் ஆக்டர். அவர் பேசுற அத்தனை விஷயங்களுமே அவர் அவுட் ஸ்டாண்டிங் பர்சன் அப்படிங்கிறதை நமக்கு சொல்லாம சொல்லிடும். யாராவது டிப்ரஷன்ல இருந்தா அட்வைஸ் பண்றது, வழிகாட்டுறதுன்னு ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். சினிமா பத்தி நிறைய பேசியிருக்கோம். சில நேரத்துல பேச்சு ஆர்க்யூமென்ட்டா கூட மாறியிருக்கு. அந்தளவுக்கு நல்ல நட்பு எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இருந்துச்சு. நான் குண்டா இருக்கிறதுக்கே அவ்ளோ திட்டியிருக்கார். `நீயொரு வொண்டர்ஃபுல் ஆக்டர். உடம்பைக் குறைச்சுட்டு நடிக்க ஆரம்பி'ன்னு சொல்வார். என் கல்யாணத்துக்கு அப்புறம் சின்னத்திரையில மட்டும்தான் நடிச்சுட்டிருந்தேன். விவேக் சார் தான் மறுபடியும். சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டார்.

உத்தமபுத்திரன், பார்த்திபன் கனவு, நம்ம வீட்டுக் கல்யாணம்னு நிறைய படங்கள் அவரோட சேர்ந்து நடிச்சிருக்கேன். பத்து நாள் முன்னாடி ஏப்ரல் 8-ம் தேதி வரைக்குமே விவேக் சாரோட வாட்ஸ் அப் மெசேஜ்ல பேசிட்டு இருந்தேன். இது சாகுற வயசாங்க அவருக்கு? என்னால ஏத்துக்கவே முடியலை. எஸ்.பி.பி அங்கிள் தவறினதையே இன்னமும் ஏத்துக்க முடியாம இருக்கேன். இப்போ இவரோட மரணம். ஹெல்த் விஷயத்துல விவேக் சார் ரொம்ப பர்ஃபெக்ட்டான மனிதர். யோகா செய்வார், வாக்கிங் போவார், சைக்கிளிங் போவார், பிராணாயாமம் செய்வார். பிரணாயாமம் செய்றவருக்கு இதயத்துல அடைப்பு, ஹார்ட் அட்டாக் அப்படிங்கிறதை என்னால நம்பவே முடியலை.''

விவேக் உடன் நடிகை அம்மு
விவேக் உடன் நடிகை அம்மு
``18 வருட நட்பு எங்களுடையது''
நடிகை அம்மு

``நான் சேர்த்து வெச்ச சொத்துல விவேக் சாரோட நட்பும் ஒண்ணு. அவரோட இயல்புக்கு ரெண்டு சம்பவங்களை உதாரணமா உங்களுக்குச் சொல்றேன். 2011-ல் என்னோட பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தப்போ அவர் ஒரு பெரிய ஹீரோ படத்துல நடிச்சிட்டிருந்தார். அழைப்பிதழ்ல பேர் போட்டவங்ககூட நிகழ்ச்சிக்கு வரலை. ஆனால், விவேக் சார் 'அம்முவோட அரங்கேற்றத்துக்கு போகணும்'னு ஷூட்டிங் ஸ்பாட்ல சொல்லிட்டு 6 மணி புரோகிராமுக்கு அஞ்சே முக்காலுக்கே ஆடிட்டோரியம் வந்துட்டார். அப்துல் கலாம், ரஜினி, அமிதாப், ஜாக்கி ஷ்ராஃப்னு பெரிய பெரிய லெஜண்ட்ஸ்கூட எல்லாம் பழகினவர் அவர். அவங்களோட கம்பேர் பண்ணா நான் ரொம்ப சாதாரணமான ஆள். ஆனா, என்னோட அழைப்பை மதிச்சு அரங்கேற்றத்துக்கு வந்தார்.

இன்னொரு சம்பவம். ஒரே ஃபிளைட்ல நாங்க ரெண்டு பேரும் எதிர்பாராம சந்திச்சுக்கிட்டோம். அவர் பிசினஸ் கிளாஸ்ல உட்கார்ந்திட்டிருந்தார். நான் எக்கானமி கிளாஸ்ல. அங்கிருந்து எழுந்து பின்னாடி எங்கியோ உட்கார்ந்துட்டிருந்த என்னோட உட்கார்ந்து டிராவல் பண்ணார்.

குடும்பத்து மேல ரொம்ப பாசமா இருப்பார். அவரோட இன்னசென்ட்டான மனைவி, பெண் குழந்தைகளை நினைச்சாதான் ரொம்ப வருத்தமா இருக்கு. அவரோட பெண் குழந்தைகளுக்கு கல்யாணமாகி அவரோட மகனே பிறந்து வரணும்னு சொல்லிட்டிருப்பேன். அதை அவரால பார்க்க முடியாம போயிடுச்சுங்கிறது தாங்க முடியாத வேதனையா இருக்கு."

``எனக்காக ட்வீட் பண்ணார்"
காஜல்
காஜல் பசுபதி
காஜல் பசுபதி

``விவேக் சாரோட இதுவரைக்கும் நாலு படங்கள்ல நடிச்சிருக்கேன். டிஷ்யூம், கள்வனின் காதலி ரெண்டும்தான் ரிலீஸாச்சு. அந்தப் படங்கள் ரிலீஸானப்போ `காஜல் ரொம்ப திறமையான நடிகை. அவங்களோட திறமைக்கு திரையுலகம் வாய்ப்பு கொடுக்கணும்'னு ட்வீட் பண்ணியிருந்தார். அந்தளவுக்கு சக நடிகர்களோட கரியருக்கு உதவணும்னு நினைக்கிறவர். மிஸ் யூ சார்."


யெஸ், வீ மிஸ் யூ சார்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு