Published:Updated:

சினிமா கரியரை முடித்துவிடுவேன் என்று மிரட்டினார்! - மீண்டுமொரு நடிகை பாலியல் புகார்...

பரபரக்கும் மலையாள திரையுலகம்...
பிரீமியம் ஸ்டோரி
பரபரக்கும் மலையாள திரையுலகம்...

பரபரக்கும் மலையாள திரையுலகம்...

சினிமா கரியரை முடித்துவிடுவேன் என்று மிரட்டினார்! - மீண்டுமொரு நடிகை பாலியல் புகார்...

பரபரக்கும் மலையாள திரையுலகம்...

Published:Updated:
பரபரக்கும் மலையாள திரையுலகம்...
பிரீமியம் ஸ்டோரி
பரபரக்கும் மலையாள திரையுலகம்...

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை, பாலியல்ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்கு விசாரணையின் தீவிரமே இன்னும் குறையவில்லை... அதற்குள் மற்றொரு நடிகை, நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகாரளித்திருப்பது, மலையாளத் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

கேரளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் விஜய் பாபு. திரைப்படத் தயாரிப்பிலும் கால்பதித்த இவர், 20-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவர்மீதுதான் தற்போது காவல்துறையில் பாலியல் புகாரளித்துள்ளார் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர். அந்தப் புகாரில் நடிகை கூறியுள்ள விஷயங்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம்...

விஜய் பாபு
விஜய் பாபு

“நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் விஜய் பாபு என்னிடம் நட்பாகப் பழகி, அறிவுரை கூறி வழிகாட்டினார். சினிமாவிலும், நான் செய்துவந்த சில தொழில்களிலும் உதவிபுரிவதுபோல நடித்து, பாலியல்ரீதியாக நெருங்கினார். ஒருகட்டத்தில் என் சினிமா கால்ஷீட், தொழில் எல்லாமே அவரது கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டன. இந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை சுமார் ஒரு மாத காலம் கொச்சியிலுள்ள அவரது ஃபிளாட்டில் என்னை அடைத்துவைத்து வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்தார். பல நாள்கள் நான் அங்கு சுயநினைவு இல்லாமல் மயங்கிக் கிடந்தேன். ஹேப்பி பில் போன்ற போதைப்பொருள்களை என்னிடம் பயன்படுத்தச் சொன்னார்... தொடர்ந்து மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றினார்... நான் மயங்கிக் கிடந்தபோது பலமுறை என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார். ஒருமுறை காரில் வைத்து இயற்கைக்கு முரணாகக் கட்டாய உறவு வைத்துக்கொண்டார். அதனால், சில நாள்களுக்கு என்னால் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. மற்றொரு முறை என்னை உறவுக்குக் கட்டாயப்படுத்தியபோது, அது பீரியட்ஸ் நேரம் என்பதால் மறுத்தேன். அதற்கு என் வயிற்றில் ஓங்கி மிதித்து, முகத்தில் துப்பிவிட்டு, கடுமையாகத் தாக்கினார்.

இதற்கிடையே நான் மயங்கிக்கிடந்தபோது என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்திருந்தார். நான் அவரிடம் என்னை விட்டுவிடும்படி கெஞ்சியபோதெல்லாம், அந்த வீடியோவை லீக் செய்து சினிமா கரியரை முடித்துவிடுவேன்; கொலை செய்துவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். நான் சினிமாதுறையில் நுழைந்தபோது என்னைக் காப்பாற்றும் ரட்சகனாக நடித்தவர், பிறகு ராட்சஷனாக மாறினார். ஆனால், கேரள திரைத்துறையில் அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இந்தக் கொடுமைகளைப் பற்றியெல்லாம் சொல்லப் பயந்து, உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தேன். இப்போது அவரது பாலியல் வக்கிரங்கள் எல்லை மீறிப்போனதால் வேறு வழியில்லாமல் புகார் கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல... விஜய் பாபுவின் வலையில் வேறு சில பெண்களும் சிக்கியுள்ளனர்” என்று நீள்கிறது நடிகையின் புகார்.

இதையடுத்து, விஜய் பாபுவின் மீது வழக்கு பதிவுசெய்த எர்ணாகுளம் சவுத் போலீஸார், அவர் தலைமறைவாகிவிட்டதாக அறிவித்துள்ளனர். விஜய் பாபு ஏப்ரல் 23-ம் தேதி துபாய் சென்றுள்ள நிலையில், திடீரென ஃபேஸ்புக் லைவ்-வில் வந்தவர், “எனது பெயர் மட்டும் வெளியே வரும்போது, அவரது (நடிகை) பெயர் மட்டும் ஏன் வெளியே வரக் கூடாது... நான், என் அம்மா, என் மனைவி எல்லோரும் கஷ்டப்படும்போது, அவர் மட்டும் சட்டத்தின் மறைவில் சந்தோஷமாக இருக்கலாமா... அவரது பெயரும் வெளியே வர வேண்டும். அதற்காக என்மீது பதியப்படும் வழக்கையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியவர், நடிகையின் பெயரையும், அவர் கதாநாயகியாக நடித்த படத்தின் பெயரையும் சொல்லிவிட்டு, மேலும் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்...

சினிமா கரியரை முடித்துவிடுவேன் என்று மிரட்டினார்! - மீண்டுமொரு நடிகை பாலியல் புகார்...

“அந்த நடிகையை 2018-ம் ஆண்டிலிருந்து எனக்குத் தெரியும். 2021 வரை அந்தப் பெண்ணுடன் எனக்கு எந்த உறவும் இல்லை. கடந்த 2021, டிசம்பர் மாதத்திலிருந்து அவர்தான் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அவர் அனுப்பிய 400-க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள் என்னிடம் உள்ளன. ‘கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அவர் மெசேஜ் அனுப்பியதால், கடந்த மார்ச் மாதம் நான் அவரைச் சந்தித்தேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று நீதிமன்றத்தில் கூறுகிறேன். அதற்கான பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று பேசியிருக்கிறார்!

இந்த விவகாரம் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள மலையாள நடிகைகள் கூட்டமைப்பு, ‘பாதிக்கப்பட்டவருக்குக் காவல்துறையில் புகார் அளிக்க முழு உரிமை உண்டு. அதேசமயம், பாதிக்கப்பட்டது யார் என்று நீதிமன்றம்தான் கூற வேண்டும். ஆனால், புகார் அளித்தவரின் பெயரை வெளியிட்டு, அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கதும், சட்ட மீறலும் ஆகும். இது நீதியைக் கொச்சைப்படுத்தும் செயல்’ என்று அறிவித்துள்ளது.

மலையாள திரைத்துறையின் பெருமையை, சமீபகால பாலியல் புகார்கள் சிதைத்துக்கொண்டிருக்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism