Published:Updated:

``என் பெற்றோர் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்!" - பேட்டியில் மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

``அவர்கள் இருவரும் பிரிந்தபோது நான் சிறியவள். சேர்ந்து இருந்தபோது இருந்ததைவிட, பிரிந்து இருக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.''

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் `Zoom Digital' ஆன்லைன் தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவரிடம், பெற்றோர்கள் பிரிந்திருப்பது குறித்தும், அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் கேட்கப்பட்டது, ``என் பெற்றோர் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. சேர்ந்து வாழ முடியாத இருவரை குறிப்பிட்ட காரணத்துக்காகச் சேர்ந்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை நான் விரும்பவில்லை. அப்பா, அம்மா இருவரில் என் அப்பா எனக்கு மிகவும் குளோஸ். என் அம்மா எங்களுள் ஒருவராக இருக்கிறார்.

பெற்றோருடன் ஸ்ருதி-அக்‌ஷரா
பெற்றோருடன் ஸ்ருதி-அக்‌ஷரா

என் பெற்றோர் இருவரும் தனித்துவமானவர்கள், மிகச் சிறந்த மனிதர்கள். அவர்கள் சேர்ந்து வாழ்வது இனி நன்றாக இருக்காது. அவர்களின் பிரிவு அவர்களைப் பாதிக்காது. அவர்கள் இருவரும் பிரிந்தபோது நான் சிறியவள். சேர்ந்து இருந்தபோது இருந்ததைவிட, பிரிந்து இருக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், நடனக் கலைஞர் வாணி கணபதியை மணந்தார். அவரை பிரிந்த பின்பு, கமலும் சரிகாவும் பல ஆண்டுகளாக லிவ் - இன் - டுகெதர் உறவில் இருந்தனர். முதல் குழந்தையான ஸ்ருதி பிறந்த பின்னர், 1986-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1991-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையான அக்‌ஷரா பிறந்தார். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

ஸ்ருதி தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அக்‌ஷராவும் 2015-ம் ஆண்டு தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். அமிதாப்பச்சன் மற்றும் தனுஷ் நடித்த `ஷமிதாப்' இந்திப் படத்தில் முதன்முறையாக நடித்தார். அக்‌ஷரா மும்பையில் தன் தாய் சரிகாவுடன் வசித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மும்பையில் தனக்கென தனியாக வீடு எடுத்துள்ளார். தன் அம்மா, அப்பா என இருவருடனும் மாறி மாறி தங்கியவாறு சினிமாவில் நடித்து வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு