Published:Updated:

``நான் பாடகியா ஆகாம இருந்திருந்தா, இப்போ என் வாழ்க்கை..!" - பர்சனல் பகிரும் வாணி ஜெயராம்

வாணி ஜெயராம்
News
வாணி ஜெயராம்

`` `சில எதிர்ப்புகள் இருக்கே... நல்ல நல்ல பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்குமா?'ங்கிற கேள்வி அப்போ எனக்குள் இருந்துச்சு. இசைத்துறையில எனக்கும் நிலையான இடம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையுடன் ஒவ்வோர் அடியையும் நிதானமா எடுத்து வெச்சேன். என் எதிர்பார்ப்பு நிறைவேறுச்சு!"

``நான் பாடகியா ஆகாம இருந்திருந்தா, இப்போ என் வாழ்க்கை..!" - பர்சனல் பகிரும் வாணி ஜெயராம்

`` `சில எதிர்ப்புகள் இருக்கே... நல்ல நல்ல பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்குமா?'ங்கிற கேள்வி அப்போ எனக்குள் இருந்துச்சு. இசைத்துறையில எனக்கும் நிலையான இடம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையுடன் ஒவ்வோர் அடியையும் நிதானமா எடுத்து வெச்சேன். என் எதிர்பார்ப்பு நிறைவேறுச்சு!"

Published:Updated:
வாணி ஜெயராம்
News
வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்... இந்தியத் திரையிசையின் ஒப்பற்ற பொக்கிஷம். கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, திரையிசை ஆகிய மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் கோலோச்சிய இசை ஆளுமை. ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் எல்லா மொழிகளிலும் பாடிய ஒரே இந்தியப் பின்னணிப் பாடகியாக, எவராலும் சமன்செய்ய முடியாத சாதனையைப் படைத்தவர். பாடகராக ஆசைப்படும் இளைய தலைமுறையினருக்கு, வாணியின் பாடல்கள் ஆகச்சிறந்த பயிற்சிப் பட்டறை.
வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்

இப்படி எண்ணற்ற புகழ்மாலைகள் சூடிய `கலைவாணி'க்கு, இன்று (நவம்பர் 30) பிறந்தநாள். தன் பாடல்கள் வழியே நம் வாழ்வியலுடன் ஒன்றிப்போனவரின் மகிழ்ச்சியான உரையாடலிலிருந்து...

சந்திக்க முடியாமல் போன நபர்கள் : ``மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர்."

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்

பின்னணிப் பாடகியாக ஆகாமல் இருந்திருந்தால் : ``வங்கிப் பணியாளரா வேலை செஞ்சு ஓய்வு பெற்றிருப்பேன்."

பசுமையான ஒரு நினைவு : ``13 வயசுல ஏ.ஆர்.ரஹ்மான் தனி இசைக்குழு தொடங்கினப்போ, அந்த நிகழ்வை குத்துவிளக்கேத்தி தொடங்கி வெச்சேன். இப்போ அந்தப் பிள்ளையோட வளர்ச்சியைப் பார்க்கிறப்போ பிரமிப்பாவும் பெருமிதமாவும் இருக்கு."

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்

குரல்வளம் : ``எண்ணெய், காரமான, குளிர்ச்சியான உணவுகளை அதிகம் எடுத்துக்க மாட்டேன். வயிறு நிறைய சாப்பிட மாட்டேன். அடிக்கடி இசைப் பயிற்சி எடுப்பேன்."

ரசித்த பாராட்டு : ``என் நிஜப்பெயர் கலைவாணி. அதை ஒப்பிட்டு, `உங்களுக்குப் பெயர் பொருத்தம் பரிபூரணமா அமைஞ்சிருக்கு'னு கண்ணதாசன் சார் சொன்னது."

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்

பெருமித தருணம் : `` `தீர்க்க சுமங்கலி' படம் வெளியாகும் முன்பே, அதுல இடம்பெற்ற `மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் வெளியாகித் திரும்பின பக்கமெல்லாம் ஒலிச்சுகிட்டு இருந்துச்சு. `மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடல் இடம்பெற்ற `தீர்க்க சுமங்கலி’ படம் பார்க்க வாருங்கள்’னு விளம்பரம் செஞ்சாங்க. ஒரு பாடலை வெச்சு படத்துக்கு விளம்பரம் செய்றதெல்லாம் அந்தக் காலத்துல ரொம்பவே அபூர்வம்."

மறக்க முடியாத நம்பிக்கை : `` `உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, ஒருபோதும் மத்தவங்களுக்குச் செய்யாதீங்க. மறப்போம் மன்னிப்போம்’னு இக்கட்டான நேரத்துல இந்தி இசையமைப்பாளர் வசந்த் தேசாய்ஜி எனக்குக் கொடுத்த ஆலோசனை."

Singer Vani Jairam
Singer Vani Jairam

சிறந்த அங்கீகாரமாக நினைப்பது : `` `சிங்கிள் டேக் சிங்கர்’னு முன்னோடி இசையமைப்பாளர்கள் பலரிடமும் பெயர் எடுத்தது."

பொறுமை : ``பின்னணிப் பாடகியான தொடக்கத்துல ரெண்டு வருஷம் எனக்கு ரொம்பவே போராட்டமா இருந்துச்சு. `சில எதிர்ப்புகள் இருக்கே... நல்ல நல்ல பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்குமா?'ங்கிற கேள்வி அப்போ எனக்குள் இருந்துச்சு. இசைத்துறையில எனக்கும் நிலையான இடம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையுடன் ஒவ்வோர் அடியையும் நிதானமா எடுத்து வெச்சேன். என் எதிர்பார்ப்பு நிறைவேறுச்சு! இசையமைப்பாளர்கள் என்மேல நம்பிக்கை வெச்சு கொடுத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நியாயம் சேர்த்திருக்கிறதா நம்புறேன். என் அனுபவத்துல சொல்றேன்... நமக்கான நேரம் வரும்வரை, நம் இலக்கு நிறைவேறும்வரை... ஒருபோதும் பொறுமையையும் உழைப்பையும் கைவிடவே கூடாது."

வாழ்க்கைக்கான ஆலோசனை : ``நாம நினைக்கிற மாதிரியே வாழ்க்கை அமைஞ்சா நல்லதுதான். ஒருவேளை நாம எதிர்பார்த்தது நடக்கலைன்னா, நடப்பது எதுவானாலும் அதை நமக்கானதா ஏத்துக்கணும். வாழ்க்கையே சுழல்ற சக்கரம் மாதிரிதான். இதுல ஏற்ற இறக்கம் இயல்பானது. இதை வாழ்நாள் முழுக்க நினைவுல வெச்சுக்கிறது நல்லது. மத்தவங்களுக்காக வாழணுமே தவிர, மத்தவங்களை அழிச்சு மேல வர நினைக்கக் கூடாது."

பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்

மறக்க முடியாத சந்திப்பு : ``யார்மேலயும் எனக்கு வெறுப்போ, கோபமோ ஏற்பட்டதில்லை. எந்தப் பகையும் மனஸ்தாபமும் இழப்பும் நிரந்தரமே கிடையாதுனு உறுதியா நம்புறவ நான். அதுக்கு நல்ல உதாரணம், லதா மங்கேஷ்கர்ஜி என்மேல காட்டின அன்பு. ஒருமுறை அவங்க வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு, எனக்குக் குங்குமம் வெச்சுவிட்டு, பிறந்தவீட்டு சீதனம்போல எனக்குப் புடவையுடன் மங்களகரமான சீர்வரிசைப் பொருள்களைக் கொடுத்தாங்க. என் குரலையும் குணத்தையும் மனதார வாழ்த்தினாங்க. இதேபோல ஆஷா போஸ்லேஜியுடன் தனிப்பட்ட பழக்கம் இல்லாட்டியும், அவங்க மேலயும் எனக்கு மதிப்பும் அன்பும் உண்டு."