பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜியை நடிகராகவும் இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் அறிவார்கள். 42 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிள் ஸ்டேட்டஸை தக்கவைத்துக்கொண்டிருந்த பிரேம்ஜி, ஒருவழியாக `கமிட்' ஆகிவிட்டதாக தகவல் கசிந்தது.
`கில்லாடி', `ஆதலால் காதல் செய்வீர்' உள்ளிட்ட பல படங்களின் பின்னணிப் பாடகியான வினைதாவுக்கும் பிரேம்ஜிக்கும் காதல் என்றும், இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் செய்தி வெளியானதோடு, அதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``And in your eyes, you're holding mine Baby, I'm dancing in the dark with you between my arms" என்ற வரிகளுடன் அந்தப் படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார் வினைதா. இரண்டையும் பொருத்திப் பார்த்து, இவர்களது காதல் உறுதிதான் என்ற செய்தி பரவியது.
கமிட் ஆனது உண்மைதானா.... அப்படி ஏதாவது திட்டமிருக்கிறதா என்று பாடகி வினைதாவிடம் கேட்டோம்.
``இது நிச்சயமா வதந்திதான். பிரேம் எனக்கு நீண்டகால, நல்ல ஃபிரெண்ட். நான் எப்போ எங்க ரெண்டு பேர் போட்டோஸ் போட்டாலும் கூடவே ஏதாவது பாட்டு போடறது வழக்கம். அவர்கூட இருக்குற மாதிரி எத்தனையோ பேர் போட்டோஸ் போடறாங்க.

நான் மட்டும் போடலையே.... யாரோ நாங்க சேர்ந்து எடுத்துக்கிட்ட இந்தப் படத்தைப் பரவவிட்டு, வதந்தியைக் கிளப்பி விட்ருக்காங்க. நிச்சயமா எனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லை..... பிரேம்ஜியை கல்யாணம் பண்ற ஐடியாவும் சுத்தமா இல்லை. இதுதான் உண்மை....'' என்று முடித்துக்கொண்டார்.