Published:Updated:

மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு - தற்போது எப்படி இருக்கிறார்?

மகேஷ் பாபு, தந்தை கிருஷ்ணா

பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா (79) உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு - தற்போது எப்படி இருக்கிறார்?

பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா (79) உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
மகேஷ் பாபு, தந்தை கிருஷ்ணா

பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமாகிய கிருஷ்ணா (கிருஷ்ண மூர்த்தி) (79) மாரடைப்பின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்குத் திரையுலகில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் என்னும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவர். இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர்.

சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கிருஷ்ணாவின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை, "மாரடைப்பின் காரணமாக இன்று அதிகாலை காலை 1.15 மணிக்கு ஸ்ரீ கட்டமனேனி கிருஷ்ண மூர்த்தி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு உடனடி சிகிச்சையாக 'CPR' முதலுதவி அளித்தனர். அவருக்குச் சுயநினைவு திரும்பியது. பிறகு அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றினோம். தற்போது அவரது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது என்பதால் எங்கள் மருத்துவமனையின் இதய நோய் மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், 24 மணிநேரத்திற்குப் பின்னர்தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும். அவரது குடும்பத்தினருக்கும் தகவல்களைக் கொடுத்து வருகிறோம்" என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.