Published:Updated:

தமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்!

வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிமாறன்

வண்ண வண்ண பூக்களுக்கு’ப் பிறகு, தேசிய விருது கிடைச்சிருக்கு. அதுவும் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் வெற்றிமாறன்.

தமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்!

வண்ண வண்ண பூக்களுக்கு’ப் பிறகு, தேசிய விருது கிடைச்சிருக்கு. அதுவும் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் வெற்றிமாறன்.

Published:Updated:
வெற்றிமாறன்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிமாறன்
2020-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சோதனைக்காலம். கொரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்புகள் நிறுத்தம், திரையரங்குகள் மூடல் ஆகியவற்றால் தளர்ந்துபோயிருந்த தமிழ்த்திரையுலகம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டிருக்கிறது. அந்த உற்சாகத்துக்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறது ‘2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள்’ அறிவிப்பு. சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம், நடுவர் விருது, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த குணச்சித்திர நடிகர், பிராந்திய மொழிப்படம், சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) என ஏழு விருதுகளைத் தமிழ் சினிமா அள்ளி வந்திருக்கிறது.
தனுஷ்
தனுஷ்

‘கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் தனுஷுக்கு இந்த விருதுச்செய்தி கூடுதல் போனஸ். ஏற்கெனவே ‘ஆடுகளம்’ படத்துக்காக ‘சிறந்த நடிகர்’ விருதுபெற்ற தனுஷுக்கு இது இரண்டாவது விருது. ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ படங்களுக் காகத் தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் தனுஷ். இதே ‘அசுரன்’ படத்துக்காக ஆனந்த விகடன் ‘சிறந்த நடிகர்’ விருது பெற்ற விழா மேடையில் “இன்னமும் என்னால் சிவசாமியின் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை. நான் பார்க்கிற பலபேரும் இதைச் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் களுக்கு அவர்கள் கரியரில் இதுபோன்ற கதாபாத்திரங்கள் எப்போதாவதுதான் கிடைக்கும் வாய்ப்பு” என்று நெகிழ்ந்திருந்தார்.

வெற்றிமாறன்.
வெற்றிமாறன்.

“ஒரு சமூகநீதிப் படமா, ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசின படமா வெளிவந்த அசுரன் வசூல்ரீதியா சாதனை படைச்சதைத் தான் நான் இந்தப் படத்தோட மிகப்பெரிய அங்கீகாரமா பார்க்கறேன். இந்தப் படம் நிறைய விவாதங்களை உருவாக்கியது. ஒரு நடிகருக்கு நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக் கொடுக்கலாம். ஆனா, அவர்தான் பெர்பார்ம் பண்ணணும். அந்த வகைல தனுஷுக்கு விருதுங்கறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. அதுவும் இந்தச் சின்ன வயசுல, தனுஷுக்கு இது ரெண்டாவது விருது. அதே மாதிரி என்னோட தயாரிப்பாளர் தாணுவுக்கு ‘வண்ண வண்ண பூக்களுக்கு’ப் பிறகு, தேசிய விருது கிடைச்சிருக்கு. அதுவும் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் வெற்றிமாறன்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ன்ன கதாபாத்திரம் என்றாலும், தனித்துத் தெரியும் விஜய் சேதுபதிக்கு, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது. எத்தனையோ வேடங்களில் நடித்திருந்தாலும் ‘திருநங்கை’ பாத்திரத்தில் நடித்ததற்காகக் கிடைத்த இந்த விருது விஜய்சேதுபதிக்கு ஸ்பெஷல்தான். “இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி. இந்த விருது அவருக்கு சமர்ப்பணம். இது அவரால் நிகழ்ந்தது. ஷில்பா மாதிரி ஒரு கதாபாத்திரத்தில என்னால நடிக்க முடிஞ்சது என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரம். விருது வாங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்று நெகிழ்கிறார் விஜய் சேதுபதி.

தமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்!

“அவனுக்கு இந்த விருது பத்தியெல்லாம் தெரியலை. இப்போ ஒன்பதாவதுதான் படிக்கிறான். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. நாங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். என் பையனுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்னு எதிர்பார்க்கவேயில்லை. எங்களுக்கு சினிமானா என்னன்னே தெரியாது. என் பையனைத் தேர்ந்தெடுத்து நடிக்க வெச்சதுக்கு இயக்குநர் மதுமிதா மேடத்துக்குத்தான் நன்றி சொல்லணும் நான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பதில் கிடைச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லும்போதே வார்த்தைகளில் மகிழ்ச்சி ததும்புகிறது, ‘கே.டி (எ) கருப்புதுரை’ படத்துக்காக ‘சிறந்த குழந்தை நட்சத்திரம்’ விருதுபெற்ற நாக விஷாலின் அம்மா மைதிலிக்கு.

தமிழ்த் திரையுலகத்துக்கு இது திருவிழாக் காலம்!

வித்தியாசமான முயற்சிகளில் ஆர்வம் கொண்ட பார்த்திபனின் பரிசோதனை முயற்சி ‘ஒத்த செருப்பு.’ ஒரே ஒரு நடிகர் நடித்த முழுநீளத்திரைப்படம் பலரின் பாராட்டு களையும் பெற்றிருந்தது. இப்போது நடுவர் விருது மற்றும் சிறந்த ஒலிக்கலவைக்கான விருது (ரசூல் பூக்குட்டி) என இரண்டு விருது களையும் பெற்றுள்ளது. “1990-ல் ‘புதியபாதை’க்காக ஒரு விருது. 2000-த்தில் ‘ஹவுஸ்புல்’லுக்காக ஒரு விருது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் காத்திருத்தல் மட்டுமே. இந்த ஆண்டு மீண்டும் விருது கிடைத்திருக்கிறது. மிகக்கடுமையான முயற்சியும் உண்மையான உழைப்பும்தான் ‘ஒத்த செருப்பு.’ எப்போதும் சினிமாவில் நாம் இருப்பதற்கு ஸ்பெஷல் காரணம் இருக்கணும்னு நினைப்பேன். அப்படி நினைச்சு எடுத்த படம்தான் ‘ஒத்த செருப்பு.’ அந்தப் படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்டு கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சி.

பார்த்திபன்
பார்த்திபன்

‘ஒத்த செருப்பு’க்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் விருதுகள் கிடைக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு, பேராசை. அதற்கான மிகச்சரியான உழைப்பு அதில் இருந்தது. திரைக்கதை, வசனத்திலும் இதுவரை யாரும் செய்யாத முயற்சிகளை நான் செய்திருந்தேன். இந்தப் படத்தில் பணியாற்றிய தற்காக ரசூல் பூக்குட்டிக்கு விருது கிடைத்தி ருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் பார்த்திபன்.

இமான்
இமான்

“தேசிய விருது கிடைத்தது பற்றி சந்தோஷம். கலைஞர்களுக்கு விருதுகள் என்பது தட்டிக்கொடுக்கிறது மாதிரி. அடுத்தடுத்த பயணம் போறதுக்கு நிச்சயம் தெம்பாய் இருக்கும். என்னை விடவும் என் ரெண்டு பெண் குழந்தைகளும் அப்பாவும் பெருமகிழ்ச்சி கொண்டார்கள். என் பாடலுக்குக் கிடைக்கிற எந்த விருதையும் தேசிய விருதாகவே மதிக்கிறேன். விஸ்வாசம் என் பாடல்களுக்காகவும் பேசப்பட்டதில் சந்தோஷப்படுகிறேன். பாடல்கள் பதிவானபோதே அஜித் சார், ‘இதில் நல்ல நல்ல பாடல்களாக அமைந்துவிட்டது’ என்றார். என்னை உருவாக்கிய, மறைந்த என் அம்மாவுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என்கிறார் இமான்.