Published:Updated:

MGR, விஜய், அஜித், சூர்யா படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளர் - கோவிந்தராஜ் மறைவுக்குத் திரையுலகம் அஞ்சலி!

கோவிந்தராஜ்

கோவிந்தராஜ் எனும் இவர் நடிகர் எம்ஜிஆர், விஜய், அஜித், சூர்யா, விஜயகாந்த் போன்ற பிரபலங்களுக்கும், கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், சங்கிலி முருகன் மற்றும் ராஜகுமாரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் பிரத்யேக ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.

கோவிந்தராஜ் 1980 மற்றும் 1990களில் திரைத்துறையில் பிரபல ஆடை வடிவைப்பாளாராக இருந்துள்ளார். இவர் 1972-ல் எம்.ஜி.ஆரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற படத்திலிருந்து விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ மற்றும் ‘காதலுக்கு மரியாதை’, அஜித்தின் ‘நீ வருவாய் என’, சூர்யாவின் 'உன்னை நினைத்து', விக்ரமின் 'புதிய மன்னர்கள்', விஜயகாந்த்தின் 'வானத்தைப் போல', சரத்குமாரின் ‘சூர்யவம்சம்’ மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் 'புரியாத புதிர்' படங்கள் உள்பட 100 படங்களுக்கு மேல் தமிழ்த் திரையுலகில் பணியாற்றியுள்ளார்.

மேலும் நடிகர் ராமராஜன், நடிகை கனகா, சங்கீதா போன்றவர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியவர் இவர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் மற்றும் ராஜகுமாரன், சங்கிலி முருகன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கு பிரத்யேக ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ்த் திரைத்துறையில் பணியாற்றி வந்த கோவிந்தராஜன் தற்போது தனது 82 வயதில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். விக்னேஷ் சிவன், சங்கிலிமுருகன், விக்ரமன் போன்ற திரைத்துறையினர் இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.