Published:Updated:

டெடி - சினிமா விமர்சனம்

டெடி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
டெடி - சினிமா விமர்சனம்

முதல் பாதி டெடி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே கடப்பதால் ஓரளவிற்கு சுவாரசியமாய் இருக்கிறது.

டெடி - சினிமா விமர்சனம்

முதல் பாதி டெடி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே கடப்பதால் ஓரளவிற்கு சுவாரசியமாய் இருக்கிறது.

Published:Updated:
டெடி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
டெடி - சினிமா விமர்சனம்
ன்னந்தனியே தனக்கான வெளியில் வலம்வரும் ஹீரோவுக்கு ஒரு பொம்மையின் நட்பு கிடைக்க, அதன்வழி நிகழும் சாகசங்களே ‘டெடி.’

படிப்பது/பார்ப்பது எல்லாம் அப்படியே மூளையில் அச்சுப்பிசகாமல் தங்கிப்போகும் அசாத்திய அறிவாளி ஆர்யா. இவ்வளவு ஆற்றல் நிரம்பிக் கிடப்பதாலேயே தனிமைப்பட்டு பின்னர் அதையே விரும்பும் ஆளாக மாறிப்போகிறார். இன்னொரு பக்கம் உடலுறுப்புகள் திருடும் கும்பலிடம் சிக்கி கோமாவுக்குப் போகிறார் ஹீரோயின் சாயிஷா. அவரின் எனர்ஜி மட்டும் அருகிலிருக்கும் டெடி பொம்மைக்குள் புகுந்து தன் உடலை உயிரோடு மீட்கப் போராடுகிறது. ஆர்யாவும் உதவ, என்ன நடக்கிறது என்பதே கதை.

டெடி - சினிமா விமர்சனம்

ஆர்யாவுக்கு இறுக்கமான ரோல். அதனாலேயே வழக்கத்தைவிட கொஞ்சம் வித்தியாசமாய்த் தெரிகிறார். சாயிஷா கெஸ்ட் ரோலுக்கும் குறைந்த அவகாசத்தில் தோன்றி, காணாமல்போகிறார். வில்லன் மகிழ்திருமேனி கடைசி சில நிமிடங்கள் மட்டும் ஆஜராகிறார். அதுவும், ‘அவங்களைக் கொன்னுடு’ என்கிற ஒரு டயலாக் மட்டுமே. ஆங்காங்கே சிரிப்பு மூட்டுவதும் கடுப்பேற்றுவதும் அந்த டெடி மட்டும்தான். அப்பாவியாய் அது செய்யும் சேட்டைகள் சிரிப்பு. பழைய ஹீரோயின் கதாபாத்திரங்கள்போல குழந்தைத்தனமாய்ச் செய்யும் வேலைகள் கடுப்பு. என்னதான் பொம்மை என்றாலும் உள்ளே இருப்பது ஒரு வளர்ந்த பெண்ணின் எனர்ஜி ஆயிற்றே!

இமானின் இசையில் ‘என் இனிய தனிமையே’ மட்டும் இனிமையே. பின்னணி இசையெல்லாம் ஏற்கெனவே கேட்ட ரகம்; யுவாவின் ஒளிப்பதிவும் சிவநந்தீஸ்வரனின் படத்தொகுப்பும்கூட அப்படியே.

முதல் பாதி டெடி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே கடப்பதால் ஓரளவிற்கு சுவாரசியமாய் இருக்கிறது. ஆனால் கதை கண்டபடி அலையும் இரண்டாம் பாதி ஆவ்வ்வ் அலுப்பு.

சி.ஜியில் டெடியை உயிர்ப்பாக வைத்திருக்க இயக்குநரும் அவரின் குழுவும் உழைத்திருப்பது வேண்டிய பலனைக் கொடுத்திருக்கிறது. ஆனால் தன் உடல் கடத்தப்பட்டது பற்றிய பிரக்ஞை கொஞ்சம்கூட இல்லாமல் அந்த டெடி பப்ஜி ஆடுவதும், ஜாலியாய் வாக்கிங் போவதும் பெரிய உறுத்தல்.

டெடி - சினிமா விமர்சனம்

லாஜிக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது என்பதற்காக போட்டோக்ராபிக் மெமரி, அவுட் ஆஃப் பாடி அனுபவம் என ஏகப்பட்ட விஷயங்களைச் சேர்த்திருந்தாலும் நிரூபிக்கப்படாத இந்த தியரிகளால், இது ஹாரர் படமா, பேன்டஸி படமா, சயின்ஸ் பிக்‌ஷனா என, பார்க்கும் நமக்குக் குழப்பங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதெப்படி ஆர்யாவைத் தவிர உலக மக்கள் யாருக்குமே ஒரு டெடி உயிர் பெற்றுத் திரிவது அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இல்லை என யோசிக்கையில் நமக்கு அதிர்ச்சியாகிறது.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் டெடி எல்லாரையும் ஈர்த்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism