Published:Updated:

பல் சிகிச்சை செய்துகொண்ட கன்னட நடிகை; ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்!

சிகிச்சைக்கு முன் மற்றும் பின்

பல் சிகிச்சை செய்துகொண்ட கன்னட நடிகைக்கு கன்னம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

பல் சிகிச்சை செய்துகொண்ட கன்னட நடிகை; ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்!

பல் சிகிச்சை செய்துகொண்ட கன்னட நடிகைக்கு கன்னம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

Published:Updated:
சிகிச்சைக்கு முன் மற்றும் பின்
மருத்துவ சிகிச்சைகள் சில நேரங்களில் தவறுதலாக சென்றுவிடுவதுண்டு. அதுபோன்ற ஒரு சம்பவம் கன்னட நடிகைக்கு நடந்துள்ளது.

கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் சமீபத்தில் பல் சிகிச்சை (ரூட் கேனல்) செய்து கொண்டார். இச்சிகிச்சைக்கு பிறகு சில மணி நேரம் கன்னத்தில் வீக்கம் இருக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால் ஸ்வாதி சிகிச்சை செய்து கொண்டு 20 நாட்கள் ஆகிறது. அப்படி இருந்தும் டாக்டர்கள் சொன்னபடி அவரது இடது கன்னத்தில் இருக்கும் வீக்கம் குறையவே இல்லை. அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கிப்போய் இருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் இருக்கும் ஸ்வாதி டாக்டர்களின் கவனக்குறைவால்தான் தனக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டதாக ஸ்வாதி தெரிவித்தார். மிகவும் எளிய முறையில் நடக்ககூடிய பல் சிகிச்சை தவறுதலாக முடிந்தது ஸ்வாதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எப்ஐஆர் போன்ற சில படங்களில் நடித்திருக்கும் ஸ்வாதி தனக்கு ஏற்பட்ட தவறான சிகிச்சைக்காக மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்கு முன் மற்றும் பின்
சிகிச்சைக்கு முன் மற்றும் பின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்வாதியின் வீங்கிய முகம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. தற்போது வேறு ஒரு மருத்துவனையில் தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு ஸ்வாதி சிகிச்சை பெற்று வருகிறார். நடிகைக்கு ஏற்பட்டுள்ள இம்முடிவு மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே கன்னட நடிகை சேதனா ராஜ் என்பவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அந்த அறுவை சிகிச்சை தவறுதலாகி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism