Published:Updated:

தூரிகை கபிலன் மரணம்: திருமணத்துக்கு வற்புறுத்தியதுதான் தற்கொலைக்கான காரணமா?

தூரிகை கபிலன்

’தற்கொலை செய்துகொள்வது எதற்கும் தீர்வல்ல’ என்று பேசக்கூடிய தூரிகை, தனது வீட்டிலேயே தூக்கிட்டு செய்துகொண்டதற்கு என்ன காரணம் என்று கபிலனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது…

தூரிகை கபிலன் மரணம்: திருமணத்துக்கு வற்புறுத்தியதுதான் தற்கொலைக்கான காரணமா?

’தற்கொலை செய்துகொள்வது எதற்கும் தீர்வல்ல’ என்று பேசக்கூடிய தூரிகை, தனது வீட்டிலேயே தூக்கிட்டு செய்துகொண்டதற்கு என்ன காரணம் என்று கபிலனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது…

Published:Updated:
தூரிகை கபிலன்
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் மட்டுமல்ல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களுக்காக ’Being Women’ என்ற ஆன்லைன் பத்திரிகையை நடத்தி வந்ததோடு காஸ்டியூம் டிசைனராகவும் இருந்துவந்தார். அசோக் செல்வன், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கும் பாவனி ரெட்டி, ரம்யா பாண்டியன், ஃபரினா என ஏராளமான சின்னத்திரை நடிகைகளுக்கும் காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார். தூரிகையின் ஒவ்வொரு டிசைனுமே கவனம் ஈர்த்து பெருமை பேசப்பட்டிருக்கின்றன.

தூரிகையின் திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் வசந்தபாலன் தனது ‘அநீதி’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, ‘உங்கள் அறிமுகம் என்பதை நிரூபிப்பேன்’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் உற்சாகமுடன் பகிர்ந்திருந்தார் தூரிகை.

தூரிகை கபிலன்
தூரிகை கபிலன்
தான் நடத்தும் ஆன்லைன் இதழில் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் தூரிகை. ’தற்கொலை செய்துகொள்வது எதற்கும் தீர்வல்ல’ என்று பேசக்கூடிய தூரிகை, தனது வீட்டிலேயே தூக்கிட்டு செய்துகொண்டதற்கு என்ன காரணம் என்று கபிலனுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது…

”தாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யவேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்கள். இதனால், அடிக்கடி வீட்டில் சண்டையும் நடந்துள்ளது. தற்போதைக்கு திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்திருக்கிறார் தூரிகை. வீட்டில் எவ்வளவோ பேசிப்பார்த்துள்ளார்கள். ஆனால், தூரிகை தனது நிலைபாட்டில் உறுதியாக இருந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், வழக்கம்போல வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்களது அன்பு மகள் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கே, கபிலன் வீட்டின் கீழ்தளத்தில்தான் இருந்துள்ளார். தூரிகையின் அறை மூன்றாவது மாடியில் இருந்துள்ளது. தூரிகையின் தம்பியை பள்ளியிலிருந்து அழைத்துவர அவரது அம்மா உஷா சென்றுள்ளார். திரும்பிவந்து தூரிகையைப் பார்க்கவந்த அம்மாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தூரிகை தூக்கில் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். உயிர் இருந்திருக்கிறது. பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தவர்கள் தூரிகையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

தற்போது, அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது” என்றவர்கள், ”உண்மையில் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் இல்லை தூரிகை. பெற்ரோரை பயமுறுத்திப் பார்க்கத்தான், எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்று அப்படிச் செய்துள்ளார். ஆனால், அதுவே வினையாகிவிட்டது” என்கிறார்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.

தூரிகை
தூரிகை

"கடந்த 4 ஆம் தேதி தொடர்புகொண்ட தூரிகை, ஐ.ஐ.டியில் நடக்கும் விழாவில் என்னைப் பேச வேண்டும் என்று உற்சாகமுடன் அழைத்தார். அதற்குள், தற்கொலை என்பது கொடுந்துயர்" என்று ஃபேஸ்புக்கில் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, யாழன் ஆதி உள்ளிட்ட பலர் பதிவிட்டுள்ளார்கள்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “'வரும் 16-ம் தேதி ஐ.ஐ.டி-யில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறேன். திருமா வருகிறார். நீங்களும் வாருங்கள்' என்று அழைத்திருந்தார் தூரிகை. அவர் பேசியபின், கபிலனும் அழைத்து விவரத்தைச் சொன்னார். விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் நிர்வாகத்திடம் போராடிதான் அந்த நிகழ்ச்சிக்கு தூரிகை அனுமதி வாங்கியிருந்தார். அந்தளவுக்கு போராட்ட குணமுள்ளவர், போல்டானவர். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இப்படித் திரைத்துறை, எழுத்தாளர்கள் எனப் பலரும் தூரிகையின் மரண அதிர்ச்சியிலிருந்து விலகாமல் தங்களது வேதனைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில், தூரிகையின் மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதையும் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 1091