Published:Updated:

"`பீஸ்ட்' சிறப்புக் காட்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்"- பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை; என்ன காரணம்?

பீஸ்ட் | Beast

'பீஸ்ட்' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தடை விதிக்கவும் வன்முறை செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

"`பீஸ்ட்' சிறப்புக் காட்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்"- பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை; என்ன காரணம்?

'பீஸ்ட்' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தடை விதிக்கவும் வன்முறை செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Published:Updated:
பீஸ்ட் | Beast
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. இணையதளங்களில் வெளியான டிரெய்லர் ரசிகர்களுக்காக சில திரையரங்கிலும் போடப்பட்டது. அப்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திருநெல்வேலியில் உள்ள திரையரங்கு ஒன்றில் இருக்கைகள் சேதமடைந்தன. இதையடுத்து 13-ம் தேதி ரசிகர்களுக்காகக் காட்டப்படும் படத்தின் சிறப்புக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், 100 அடிக்கு மேலே கட்அவுட்டுகள் வைக்கவும், அதன் மீதேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும் வன்முறை செயலில் ஈடுபடும் ரசிகர்கள் மீதும், அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில்...

"நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொறுப்பற்ற தன்மையோடு வன்முறை செயலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" எனவும்,

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஏப்ரல்-13ம் தேதியன்று தமிழகத்தில் வெளியாக இருக்கும் பீஸ்ட் பட வெளியீட்டின் போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஏப்ரல் 13-ம் தேதி நள்ளிரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் அத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்படவேண்டும்.

'பீஸ்ட்' டில்...
'பீஸ்ட்' டில்...

திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட நடிகரின் 100 அடிக்கும் மேலான கட்அவுட்டுகள் மீதேறி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதால் அவர்கள் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதோடு, திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கும் அது இடையூறு ஏற்படுத்தும் என்பதால் திரையரங்கு வளாகங்களில் மிகப்பெரிய அளவிலான கட்அவுட்டுகள் வைக்கவும், அதன் மீதேறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து பாலினை வீணடிக்கவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism