Published:Updated:

நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!

நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் புகுந்ததென்று சிலர் புகார் எழுப்பியதன் விளைவால் நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் புகுந்ததென்று சிலர் புகார் எழுப்பியதன் விளைவால் நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

Published:Updated:
நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!
நேரில் சென்று பார்க்க முடியாத தங்கள் அபிமான நடிகர்கள், தலைவர்கள் தங்கள் ஊருக்கே வந்து தங்கள் முன்னாள் ஆடிப்பாடி மகிழ்வித்தால் எப்படி இருக்கும்... அப்படியான உணர்வைக் கொடுத்தவர்கள்தாம் இந்த நிழல் கலைஞர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிராமக் கோயில் திருவிழா, கட்சிப் பொதுக் கூட்டங்கள், பள்ளிக்கூட ஆண்டு விழாக்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், நேதாஜி, அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர், ஜெயலலிதா என்று பல்வேறு சாயல்களில் உலா வந்தவர்கள் இவர்கள்.

ஓர் இயக்கம்போல மதுரையில் 90களில் புதுவகையான நடன பார்முலாவை உருவாக்கிய நிழல் நடனக்கலைஞர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் பிரபலமாகி, கடந்த காலங்களில் ரொம்ப பிஸியாக இருந்தார்கள்.

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் புகுந்ததென்று சிலர் புகார் எழுப்பியதன் விளைவால் நீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் பல ஊர்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறையத் தொடங்கியது. அதனால், இதையே முழு நேரத்தொழிலாக நம்பியிருந்த நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் பங்கெடுத்து வந்த நிலையில் தற்போது கொரோனாப் பேரிடர் அவர்கள் வாழ்க்கையை இன்னும் மோசமாகப் புரட்டிப்போட்டுள்ளது.

நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!

மனதை ஒருநிலைப்படுத்தி பிரபலங்களின் நிழல்களாக மாறி உடலை வருத்தி ஆடிப் பாடினாலும் இவர்களை உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவோ கலைஞர்களாகவோ அரசு அங்கீகரிக்கவில்லை. அமைப்புசாராத் தொழிலாளர் வாரியத்தில்கூட இவர்களால் உறுப்பினராகச் சேர முடியாத நிலை. இன்னொரு பக்கம், இவர்கள் பிறரைப்போல் நடிப்பவர்கள், தனித்திறமை இல்லை என்ற குரல்களால் நடனக் கலைஞர்கள் அமைப்புகளிலும் சேர முடியாத நிலை.

இவர்களில் சிலரைத் திருப்பரங்குன்றத்தில் சந்தித்தோம். நிழல் விஜயகாந்தான நாராயணன் “நான் 20 வருடத்துக்கும் மேல இந்த பீல்டுல இருக்கேன். சின்ன வயசுலேருந்தே கேப்டன்போல இருப்பதாகப் பலரும் சொல்ல, நானே என்னை கேப்டனாக நினைத்து அவருடைய மேனரிசங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அதைத்தொடர்ந்து கேப்டன் மன்ற விழாக்களில் அவர்போல் வேடமிடத் தொடங்க, பலரும் பாராட்ட, அதையே என் முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டேன். தமிழகம் முழுதும் கேப்டன் கலந்துகொள்ளும் தே.மு.தி.க கூட்டங்கள் அனைத்திலும் அந்த நிகழ்ச்சியின் தீம் சாங்குக்கு நான்தான் கேப்டனாக மாறி நிப்பேன். இதை மேடை யிலிருந்து ரசிக்கும் கேப்டனும், அண்ணியும் அருமையா பண்ணினே என்று பாராட்டு வார்கள். அதோடு திருவிழாக் களில் கேப்டனின் பாடல் களுக்கு அவர் கெட்டப்பில் ஆடும்போது ரசிகர்கள் கைதட்டி மகிழ்வார்கள். அந்தக் கைதட்டலுக்காகத்தான் வேறு எந்தத் தொழிலும் செய்ய மனம் வராமல் முழு நேரம் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் கலைஞராக மாறிப் போனேன். நல்ல வருமானமும் வந்தது. ஓய்வில்லாமல் கெட்டப் போட்டு வந்தேன். ஆபாச நடனம் தொடர்பான நீதிமன்ற உத்தரவால் தொழில் பாதிக்கப்பட்டுச்சு. கொஞ்ச நஞ்ச வாய்ப்பும் இந்தக் கொரோனா ஊரடங்கால் இல்லாமல்போய்விட்டது” என்கிறார் குரல் கம்ம.

நாராயணன் - ஜமாலுதீன் - ராம்குமார் - பாலா
நாராயணன் - ஜமாலுதீன் - ராம்குமார் - பாலா

ராம்குமார், “நான் எம்.ஜி.ஆர், சத்யராஜ் கெட்டப் போடுவேன். ஆரம்பத்தில் திருவிழாக்களில் நாடகம், பாட்டுக்கச்சேரி, கரகாட்டம் போன்ற நிகழ்ச்சி களை நடத்தி வந்தபோது மதுரையைச் சேர்ந்தவர்கள்தான் நடிகர்கள் கெட்டப்பில் நடனம் ஆடும் புதியவகைக் கலையை உருவாக்கினார்கள். இது மக்களிடம் நல்ல ரீச்சானது. ஆடல் திறமையுள்ள எங்களைப் போன்றோருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 90-களில் மதுரையில் இருந்து பல நடனக் குழுக்கள் உருவாகி பிரபலமாக விளங்கியது. அதுமட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களின் கெட்டப்களுக்கு கட்சிக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஒரே நாளில் ரெண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு பிஸியாக இருந்தோம். இப்போ நிலைமையே தலைகீழ்” என்றார்.

பல கெட்டப் பாலா, “நான் பலவிதமான கெட்டப்புகளைப் போடுவேன். அதுமட்டுமல்லாமல், டான்சில் ரிஸ்க் எடுத்து, பல புதுமையான முயற்சிகளைப் புகுத்தியிருக்கிறேன். அதனால், தமிழ், இந்தி, மலையாள சானல்களின் போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றிருக்கிறேன். ஆனால், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகள் பலரின் வாழ்க்கையை பாதித்துள்ளது. அரசுதான் எங்கள்மீது கருணை வைத்து உதவிகளைச் செய்ய வேண்டும். எங்களை அங்கீகரித்து அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க வேண்டும்” என்றார். தமிழகத்தில் கேரளச் செண்டை மேளக் குழுக்களின் ஆதிக்கத்தை நிறுத்த சோனிக் என்ற மேளக் குழுவை இவர் உருவாக்கி வருவதாகச் சொன்னார்.

நீண்ட துயரத்தில் நிழல் கலைஞர்கள்!

அப்துல் கலாம், ரஜினி கெட்டப்புகளில் கலக்கிய ஜமாலூதீன், செவ்வாழை ஆகியோர் “நடிகர்கள்போல உருமாறி அவர்களின் நடன அசைவுகளை, தலைவர்களின் மேனரிசங்களை வெளியே கொண்டு வருவதும் ஒரு கலைதான். ஆனால், நாங்களும் கலைஞர்கள்தான் என்பதை நிரூபிக்கவே போராட வேண்டி யுள்ளது. எங்களுக்கும் குடும்பம் உறவினர்கள் உள்ளனர். கடந்த 7 மாதங்களாக வாய்ப்பில்லாமல் அல்லல்படும் எங்களுக்கு அரசு உதவிகளைச் செய்ய வேண்டும்” என்றார்.

எம்.ஜி.ஆராக, ரஜினியாக, கமலாக, விஜயகாந்தாகவே நினைத்து வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்த நிழல்கலைஞர்கள் இப்போது நீங்காத சோகத்தில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism