சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விஜய்யின் மாஸ்டர் பிளான்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

Money Heist வித் ‘மணிரத்னம்’!

விஜய்யிடமிருந்து ஒற்றை ட்வீட்டில் ஒரு அப்டேட் வந்தாலும் அதுதான் உலக வைரல். ‘` ‘மாஸ்டர்’ டிரெய்லர் எப்போ, பட ரிலீஸ் எப்போ’’ என எப்போதும் அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்காக விஜய்யின் லாக்டெளன் அப்டேட்ஸ் இங்கே!
  • மார்ச் 15-ம் தேதி நடந்த ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு வெளியே எந்த ஒரு நிகழ்விலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. நீலாங்கரை வீடு, பனையூரில் இருக்கும் தனது மக்கள் இயக்க மன்றம், அடையாறு அலுவலகம் என இந்த மூன்றும்தான் லாக்டெளனில் விஜய்யின் விசிட்டிங் ஸ்பாட்ஸ். அவரின் கார் தென்சென்னையைத் தாண்டவில்லை என்கிறார்கள்.

விஜய்யின் மாஸ்டர் பிளான்
  • கனடாவில் படித்துக்கொண்டிருந்த மகன் ஜேசன் சஞ்சய் திடீர் லாக்டெளனால் சென்னைக்குத் திரும்பமுடியாததில் விஜய் ஆரம்பத்தில் கொஞ்சம் அப்செட். ஆனால், கனடாவில் உறவினர்கள் வீட்டில் மிகவும் பாதுகாப்பாகவே தங்கியிருந்தார் சஞ்சய். இருந்தாலும் மகன் இந்தநேரத்தில் தன்னுடன் இருக்கவேண்டும் என விரும்பிய விஜய், சர்வதேச விமானங்கள் பறக்க ஆரம்பித்ததும் முதல் வேலையாக ஜேசன் சஞ்சயைச் சென்னைக்கு வரவழைத்துவிட்டார். மாநகராட்சி அறிவுரைப்படி ஒரு தனியார் ஹோட்டலில் இரண்டு வாரங்கள் தனிமையில் தங்கியிருந்த பிறகே வீட்டுக்கு வந்திருக்கிறார் ஜேசன்.

  • லாக்டெளன் முழுக்கவே ஓடிடி-யில் படங்கள் வெப்சீரிஸ்கள் பார்ப்பதுதான் விஜய்யின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. அமேசான், நெட்ஃபிளிக்ஸ் என ஓடிடி தளங்களில் இருந்த, ரேட்டிங்கில் சிறந்த அத்தனை படங்களையும், வெப்சீரிஸ்களையும் சலிக்க சலிக்கப் பார்த்தார் என்கிறார்கள். ‘மணிஹெய்ஸ்ட்’ வெப்சீரிஸையும் பார்த்திருக் கிறார். பழைய மணிரத்னம் படங்களையும் பார்த்திருக்கிறார்.

  • பொதுவாக காலையில் சீக்கிரமே எழுந்து வாக்கிங் போவது விஜய் வழக்கம். ஆனால், இந்த லாக்டெளன் காலங்களில் இன்னும் சீக்கிரமாக காலை 4 மணிக்கே எழுந்து வாக்கிங் போக ஆரம்பித்துவிடுகிறாராம். அதிகாலையிலேயே நண்பர்களுடன் உரையாடுவதும், கொரோனா உட்பட சினிமா உலக அப்டேட்களைப் பேசித் தெரிந்துகொள்வதும் எப்போதும்போலத் தொடர்கிறது.

விஜய்யின் மாஸ்டர் பிளான்
  • பிஎம்டபிள்யு, ரோல்ஸ் ராய்ஸ், மினிகூப்பர் எனப் பல கார்கள் இருந்தாலும் விஜய் இப்போது பயன்படுத்துவது ‘CJ 5557’ நம்பர் பிளேட் கொண்ட இனோவா க்ரிஸ்ட்டா கார்தான். பனையூரில் கடற்கரையை ஒட்டியிருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்துக்குத்தான் இந்தக் கார் அடிக்கடி பறக்கும். ட்விட்டரில் மகேஷ்பாபு கிரீன் இந்தியா சேலன்ஞ்சில் டேக் செய்ததும் ஆர்வத்துடன் அதில் பங்கேற்ற விஜய், செடிகளை நட்டதும் பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில்தான். ட்விட்டரில் விஜய் போட்டோக்களைப் பகிர்ந்ததுமே மகேஷ் பாபுவிடமிருந்து விஜய்க்கு போன் வந்திருக்கிறது.

  • கடந்தவாரம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தன் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைக் கேள்விப்பட்டு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் அடித்திருக்கிறார்.

    ‘`ட்விட்டர்ல அந்தப் பையன் தொடர்ந்து பல நாளா அவ்ளோ ஸ்டேட்டஸ் போட்டிருக்கான். உடனே போய்ப் பார்த்து, அவனுக்கு உதவி பண்ணியிருக்கலாமே’’ எனக் கோபப்பட்டி ருக்கிறார். உடனடியாக அந்த ரசிகரின் மாமாவிடமும் போனில் பேசியிருக்கிறார். தேவையான உதவிகளை அவர்களுக்குச் செய்துதரும்படி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் சொல்லியிருக்கிறார்.

  • தனது அடுத்த படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸை இந்த லாக்டெளன் காலத்தில் அடையாறு அலுவலகத்தில் வைத்து ஒரேயொரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜய். இயக்குநரிடமிருந்து முழு ஸ்கிரிப்ட் வருவதற்காக வெயிட்டிங்காம்.

  • ‘மாஸ்டர்’ படத்தின் டிரெய்லர் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. கொரோனாச் சூழல் முழுமையாக சரியானதும் படத்தைப் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கான வேலைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன.