Published:Updated:

Rishabh Pant விவகாரம்; நான் மன்னிப்பு கோரவில்லை - நடிகை ஊர்வசி ரவுடேலா!

ஊர்வசி ரவுடேலா

தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரிஷப் பண்ட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தவறான செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுடேலா.

Rishabh Pant விவகாரம்; நான் மன்னிப்பு கோரவில்லை - நடிகை ஊர்வசி ரவுடேலா!

தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரிஷப் பண்ட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தவறான செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் நடிகை ஊர்வசி ரவுடேலா.

Published:Updated:
ஊர்வசி ரவுடேலா

பாலிவுட் நடிகை, மாடல் என வலம் வருபவர் ஊர்வசி ரவுடேலா. இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் திரையுலகப் பயணம் பற்றியும் தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய தருணங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்கு நிறைய பேர் காதல் புரோபோஸ்கள் செய்துள்ளதாகக் கூறிய அவர் தனக்காக பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ரிஷப் பண்ட் நீண்ட நேரம் ஹோட்டலில் காத்திருந்தார் என்று பேசியிருந்தார். இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் இது பற்றி தன் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்துள்ளார்.

Rishabh Pant
Rishabh Pant
Hotstar

ரிஷப் பண்ட்டின் பெயரைக் குறிப்பிடாமல் 'RP' என்று ஊர்வசி குறிப்பிட்டதையடுத்து ரிஷப் பண்ட் குறித்த நெட்சன்களின் பல்வேறு பதிவுகள் வைரலாயின. இதற்கு பதிலளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "பிரபலமாக வேண்டும், நாம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. பெயருக்காகவும் பிரபலமாவதற்காகவும் இப்படியெல்லாம் நடந்துகொள்வது வருத்தமாக உள்ளது. கடவுள் தான் இவர்களைக் காப்பற்ற வேண்டும்" என்று பதிலடி கொடுத்திருந்தார்

ஊர்வசி ரவுடேலாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
ஊர்வசி ரவுடேலாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரிக்கெட் ஆடுவதை மட்டும் பாருங்கள். சிறு குழந்தையை வைத்து பிரபலமாகும் எண்ணம் எனக்குக் கிடையாது’’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரிஷப் பண்ட்டிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தவறான செய்திகளைப் பரப்பியும், அதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ் ஒன்றை உருவாக்கியும் , சமூகவலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனை அறிந்த நடிகை ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இன்றைய காலக்கட்டத்தில் சில செய்திக் கட்டுரைகளும், மீம்ஸ் பக்கங்களும், படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை விட அதிகமாகக் கதை எழுதுகின்றனர் என்றும் நான் கோரிய மன்னிப்பு என் ரசிகர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கானது. #WhyTheNewsIsNotTruth, #Flasemisleadinglight, #greatscript, #FactsAreNotCopyrightable என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டிருக்கிறார்.