Published:Updated:

`மழை பிடிக்காத மனிதன்' விஜய் ஆண்டனி... சரத்குமார், மேகா ஆகாஷ் கூட்டணியில் விஜய் மில்டன்!

'அடக்கி வைக்கப்படுபவர்கள் எப்படி மேலே வெகுண்டெழுவர்' என்பதைப் பேசும்விதமாக படத்தின் கதை அமைந்திருக்கிறது என்கின்றனர்.

முதல் முறையாக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர்& இயக்குநர் விஜய் மில்டனின் கூட்டணியில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற கவிதையான தலைப்பில் ஆக்ஷன் படம் ஒன்று உருவாகிறது. டையூ டாமனில் ஷுட்டிங்கை வெயிலில் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஹீரோவுக்கு மழை பிடிக்காமல் இருப்பதன் காரணத்தைப் படம் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் படக்குழுவினர்.

விஜய் ஆண்டனியின்  புதிய படம்
விஜய் ஆண்டனியின் புதிய படம்

இதில் விஜய் ஆண்டனிக்கு இணையாக சரத்குமார் முக்கிய வேடமேற்று நடிக்கிறார். இருவரும் நண்பர்களாக வருகிறார்கள். விஜய் மில்டனின் முந்தைய படமான 'கோலி சோடா'வின் இன்னொரு வடிவமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.'அடக்கி வைக்கப்படுபவர்கள் எப்படி மேலே வெகுண்டெழுவர்' என்பதைப் பேசும்விதமாக படத்தின் கதை அமைந்திருக்கிறது என்கின்றனர்.

உழைப்பும் உறுதியும் பிடிக்கும்! - நடிகை மேகா ஆகாஷ்
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

பிரபல கன்னட நடிகர்கள் தனஞ்செயா, பிரிதிவி அம்பார் இருவரும் முக்கிய வேடங்களில் தமிழில் அறிமுகமாகிறார்கள். விஜய் மில்டனுக்கு கன்னட சினிமாவில் பணிபுரிந்து நல்ல பரிச்சயமுண்டு. சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமாரின் படத்தை இயக்கி, அது முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

'மழை பிடிக்காத மனிதன்' கவிதையான டைட்டிலுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. விஜய் மில்டன் பல கவிதைப் புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். அவரது 'கொலுசுகள் பேசக்கூடும்' புத்தகம், பல பதிப்பு கண்டிருக்கிறது. காதலிப்பவர்கள் பலரின் அன்பளிப்புக்கான முதல் சாய்ஸாக அந்தப் புத்தகம் தற்போதும் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு