Published:Updated:

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் `ஊதா கலரு ரிப்பன்'!

தார்மிக் லீ

தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் விஜய் மில்டனும் ஒருவர். `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

Vijay Antony - Vijay Milton
Vijay Antony - Vijay Milton

`அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', `கோலி சோடா', `10 என்றதுக்குள்ள', `கடுகு', 'கோலி சோடா 2' போன்ற படங்களை இயக்கியவர் விஜய் மில்டன். இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனியை இயக்கவிருக்கிறார். விஜய் ஆண்டனியோ `தமிழரசன்', `காக்கி', `அக்னி சிறகுகள்' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்தப் படங்களை முடித்துவிட்டு விஜய் மில்டனுடன் கூட்டணியமைக்கிறார் விஜய் ஆண்டனி.

ஶ்ரீதிவ்யா
ஶ்ரீதிவ்யா

இப்படத்தில் அல்லு அர்ஜூனின் தம்பியான அல்லு சிரிஷ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்குமுன் ராதா மோகன் இயக்கிய `கௌரவம்' படத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் ஆண்டனியின் ஜோடியாக ஶ்ரீதிவ்யா கமிட்டாகியிருக்கிறார். தமிழில் நடிக்க ஆரம்பித்தபோது பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், நடுவில் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார்.

கடந்த வருடம் வெளியான `சங்கிலி புங்கிலி கதவத்திற' படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. அதைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில்தான் கமிட்டாகியுள்ளார். இதுமட்டுமன்றி, பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான பர்னேஷ் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.