Published:Updated:

"விக்ரம் சார் கடவுள் மாதிரி... அவர் வெறும் வாழ்த்தோட நிறுத்திடல!" - மேரி குடும்பத்தினர் நெகிழ்ச்சி

திருமணத்தில் விக்ரம், துருவ் விக்ரம்

"என்னங்க, திருமணத்துக்கு வந்து கலந்துக்கிட்டாருன்னு மட்டும் சொல்லிட்டீங்க. இந்தத் திருமணத்தை நடத்தி வெச்சவரே விக்ரம் சார்தாங்க" என்று ஆச்சர்யப்படுத்துகிறார் கலையழகன்.

"விக்ரம் சார் கடவுள் மாதிரி... அவர் வெறும் வாழ்த்தோட நிறுத்திடல!" - மேரி குடும்பத்தினர் நெகிழ்ச்சி

"என்னங்க, திருமணத்துக்கு வந்து கலந்துக்கிட்டாருன்னு மட்டும் சொல்லிட்டீங்க. இந்தத் திருமணத்தை நடத்தி வெச்சவரே விக்ரம் சார்தாங்க" என்று ஆச்சர்யப்படுத்துகிறார் கலையழகன்.

Published:Updated:
திருமணத்தில் விக்ரம், துருவ் விக்ரம்
"நடிகர் விக்ரமின் வீட்டுக் குடும்ப விசேஷமா இது?" என்று அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு, தன் வீட்டில் பணிபுரியும் மேரியின் மகன் திருமணத்திற்கு வேட்டி சட்டையுடன் வந்து அவர் கலந்துகொண்டது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் மனைவியுடன் வந்திறங்கிய விக்ரம் மணமகனின் சட்டை, மாலையை எல்லாம் சரி செய்துவிட்டு அரவணைப்போடு நடந்திருக்கிறார். அதேபோல், துருவ் விக்ரமும் ரிசப்ஷனுக்கு வந்திருந்த இருவீட்டார் சொந்தங்களின் தோள்மீது கைபோட்டுக்கொண்டு போட்டோ எடுத்திருக்கிறார். இந்த அளவுக்கு தனது வீட்டு ஊழியரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறாரே எப்படி என்று நெகிழ்ந்துபோய், மேரியின் கணவரின் தம்பி கலையழகனிடம் பேசினோம்.

திருமண விழாவில் துருவ் விக்ரம்
திருமண விழாவில் துருவ் விக்ரம்

"என்னங்க, திருமணத்துக்கு வந்து கலந்துக்கிட்டாருன்னு மட்டும் சொல்லிட்டீங்க. இந்தத் திருமணத்தை நடத்தி வெச்சவரே அவர்தாங்க" என்று மேலும் ஆச்சர்யம் தருகிறார் கலையழகன்.

"எங்க அண்ணன், அண்ணி, நான் என குடும்பமே விக்ரம் சார் வீட்டுலதான் வேலை பார்த்துட்டு வர்றோம். அண்ணன் ஒளிமாறன் உடம்பு சரியில்லாமல் கடந்த 1997-ம் ஆண்டு இறந்துட்டார். நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை பெசண்ட் நகர். எங்களை மாதிரி ஏழைகளுக்குச் சொந்த வீடெல்லாம் கனவுமாதிரி. அதுவும், பெசண்ட் நகர்னா நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், விக்ரம் சாரும் மேடமும்தான் தங்குறதுக்கு வீடு இல்லன்னு பெசண்ட் நகர்லயே எங்க குடும்பத்துக்குக் கால் கிரவுண்டுல வீடு வாங்கிக் கொடுத்தாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கன்னு இல்லை. பொதுவாவே, வேலை பார்க்கிறவங்ககிட்ட ரொம்பப் பாசமா இருப்பாங்க. இவங்க நம்ம வீட்டுல வேலை செய்றவங்கதானே நமக்கென்னன்னு விட்டுடமாட்டாங்க. என் அண்ணன் பசங்க தீபக், ஆதித்யா ரெண்டு பேரையும் விக்ரம் சார்தான் படிக்க வச்சார். இப்படி எல்லா நல்லதும் செய்த விக்ரம் சார், எப்படித் திருமணத்தைச் செய்துவைக்காம இருப்பாரு? மாப்பிள்ளை வீட்டோட எல்லாச் செலவையும் அவரே ஏத்துக்கிட்டார். ரிசப்ஷனை ரொம்ப கிராண்டா பண்ணிக்கொடுத்தார். சென்னையில் இருந்து திருப்போரூர் 40 கிலோமீட்டர். அங்கிருக்கும் முருகன் கோயிலில்தான் திருமணம் நடந்தது. குடும்பத்துல ஒருத்தர் மாதிரியே அவ்ளோதூரம் அதுவும் வேஷ்டி சட்டையில் வந்து மணமக்களை ஆசீர்வாதம் செய்தார் விக்ரம் சார். எங்களுக்குக் கடவுளே நேர்ல வந்து வாழ்த்தின மாதிரி இருந்துச்சு.

விக்ரம்
விக்ரம்

மாலையில் நீலாங்கரையில் ரிசப்ஷன் வச்சிருந்தோம். மேடம் (விக்ரம் மனைவி), துருவ் சார்னு எல்லோரும் நேர்ல வந்து மனசார வாழ்த்தினாங்க. விக்ரம் சார் ரொம்ப மனிதநேயம் மிக்கவர். சாரிடம் நான் 18 வயசு இருக்கும்போது வேலைக்குச் சேர்ந்தேன். எல்லார்கிட்டயும் ரொம்ப ஜாலியா பழகுவார். திருமணத்துக்கு வந்தப்போகூட, மாப்பிள்ளைக்கு சட்டை, மாலை எல்லாம் சரி செய்துவிட்டார். அதேபோல, துருவ் சாரும் ரிசப்ஷனுக்கு வந்த எல்லோருடனும் கையைப்போட்டுக்கிட்டு போட்டோ எடுத்தார். எல்லோரிடமும் ரொம்ப எளிமையா பழகுவாங்க. விக்ரம் சாரும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கணும்" என்றார் கலையழகன்.