Published:Updated:

`கமல் அரசியலில் இருந்தாலும், சினிமா தான் அவருடைய உயிர் மூச்சு'; கோவையில் நடந்த விக்ரம் வெற்றி விழா

கமல்ஹாசன்

ராஜ்கமல் நிறுவனம் தன் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலகட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன் - கமல்

`கமல் அரசியலில் இருந்தாலும், சினிமா தான் அவருடைய உயிர் மூச்சு'; கோவையில் நடந்த விக்ரம் வெற்றி விழா

ராஜ்கமல் நிறுவனம் தன் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலகட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன் - கமல்

Published:Updated:
கமல்ஹாசன்

நடிகல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் 100 நாள் கொண்டாட்டம் கோவை கே.ஜி திரையரங்கத்தில் நடந்தது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது, “களத்தூர் கண்ணம்மாவில் நடித்தபோது, செல்லும் இடமெல்லாம் ‘நீ தானே அந்தக் குழந்தை’ எனக் கேட்பார்கள். சந்தோஷமாக இருந்தது. கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

விக்ரம் 100வது நாள் கொண்டாட்டம்
விக்ரம் 100வது நாள் கொண்டாட்டம்

போஸ்டர் அருகே எல்லாம் சென்று நின்று, என்னையும் போஸ்டரையும் ஒப்பிட்டு கண்டுபிடிப்பார்களா என்றெல்லாம் பார்ப்பேன். பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களால் இன்று ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்து வருகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேடையில் உள்ள அனைவரும் என் குடும்பம். விக்ரம் சினிமாவின் வெற்றிக்கு இவர்கள் எல்லாருமே காரணம். கலைத்தொழில் வெவ்வேறு வடிவில் உருமாறிக் கொண்டே இருக்கும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், போல்தான் சினிமாவும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

என் அக்கா, அண்ணன் எல்லாம் நன்கு படித்தனர். நான் அதை எல்லாம் செய்யாதவன். நல்ல கலைஞர்களை படித்திருக்கிறேன்.  நல்ல சினிமாக்களை கை விட்டு விடாதீர்கள். அற்புதமாக எடுக்கும் இயக்குநர்களை கைவிடாதீர்கள்.

நன்கு நடிக்கும் நடிகர்களை வாழ்த்துங்கள். நீங்கள் வாழ்த்தினால் எங்கள் வீட்டில் பொன்மழையாக பொழியும். ‘இவன் நல்லா நடிக்கிறான்’ என நீங்கள் வெளியில் போய் சொன்னால், என் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல.  நல்லா நடிக்கிற எல்லா நடிகர், கலைஞர்களையும் வாழ்த்துங்கள்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். அனைவர் கவனமும் தெற்கு பக்கம் வந்துள்ளது என வட இந்தியாவில் பயப்படுகிறார்கள். நாம் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில் விக்ரம் படத்தின் க்ளைமாக்ஸ் எடுக்கும்போது எனக்கு கோவிட் வந்து விட்டது.

அதனால் கடைசி நேரத்தில் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றினோம். ராஜ்கமல் நிறுவனம் தன் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலகட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன்,” என்றார். முன்னதாக திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம் பேசியதாவது, “கோவையில் ஒரு படத்தின் நூறாவது நாள் விழா கொண்டாடி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.

விக்ரம் 100வது நாள் கொண்டாட்டம்
விக்ரம் 100வது நாள் கொண்டாட்டம்

நூறாண்டு சினிமா வரலாற்றில் விக்ரம் தான் ரெக்கார்டு ப்ரேக்கிங் கலெக்சன் எடுத்துள்ளது. கமல் அரசியலில் இருந்தாலும், சினிமா தாம் அவருடைய உயிர் மூச்சு. ‘எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும், திரையரங்குகள் எப்போதும் அழியாது.’ என கூறினார் கமல். உலக நாயகன் வார்த்தைக்கு 100 க்கு 200 சதவிகிதம் பொருத்தமானவர்.” என்றார்.