Published:Updated:

`மகனுக்கு வாழ்த்து தெரிவித்த கோலி!’ - ட்விட்டரில் நெகிழ்ந்த விக்ரம் பிரபு

Virat Kohli - Vikram Prabu
Virat Kohli - Vikram Prabu

`கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், விக்ரம் பிரபு. அதன் பின்னர், `இவன் வேற மாதிரி', `அரிமா நம்பி', `சிகரம் தொடு' போன்ற படங்களில் ஆரம்பித்து, `60 வயது மாநிறம்', `துப்பாக்கி முனை' என 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.

கடந்த பிப்ரவரி 2007-ல் லட்சுமி உஜ்ஜைனி என்பவரை திருமணம் செய்துகொண்டார், விக்ரம் பிரபு. இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு, விராட் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவர்களது மகனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ அனுப்பியுள்ளார். அதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், விக்ரம் பிரபு.

 Vikram Prabu's Tweet
Vikram Prabu's Tweet

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய டெஸ்ட் சீரிஸில் இந்திய அணி மாபெறும் வெற்றிபெற்றது. இதன் செலிப்ரேஷனில் இருந்ததோடு, விக்ரம் பிரபுவின் மகனான விராட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், கோலி. அவர் வாழ்த்தியிருந்த வீடியோவை, ``உங்களது பரபரப்பான நேரத்தில் எனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்தது ரொம்பவே ஸ்வீட். விராட் அந்த வீடியோவைப் பார்த்ததும் ரொம்பவே ஹேப்பி ஆகிட்டான். வெற்றிபெற்றதுக்கும் வாழ்த்துகள்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ந்துள்ளார், விக்ரம் பிரபு. தற்போது, தனா இயக்கும் `வானம் கொட்டட்டும்' படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார், விக்ரம் பிரபு.

அடுத்த கட்டுரைக்கு