Published:Updated:

`அந்த ஹோட்டலில் அவமானப்படுத்தப்பட்டேன்!' - மும்பையில் பிரியா வாரியருக்கு என்ன நடந்தது?

Priya Prakash Varrier ( Instagram Photo: @priya.p.varrier )

``படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஹோட்டலுக்குத் திரும்பியபோது, வழியிலுள்ள ஒரு ரெஸ்டாரன்டில் உணவை வாங்கிக்கொண்டுத் திரும்பினேன். ஆனால், அந்த உணவை உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை என்றனர் ஹோட்டல் நிறுவனத்தினர். எனது அறையில் சென்றுதானே சாப்பிடப் போகிறேன் என சொல்லியும் விடவில்லை."

`அந்த ஹோட்டலில் அவமானப்படுத்தப்பட்டேன்!' - மும்பையில் பிரியா வாரியருக்கு என்ன நடந்தது?

``படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஹோட்டலுக்குத் திரும்பியபோது, வழியிலுள்ள ஒரு ரெஸ்டாரன்டில் உணவை வாங்கிக்கொண்டுத் திரும்பினேன். ஆனால், அந்த உணவை உள்ளே கொண்டு செல்ல அனுமதியில்லை என்றனர் ஹோட்டல் நிறுவனத்தினர். எனது அறையில் சென்றுதானே சாப்பிடப் போகிறேன் என சொல்லியும் விடவில்லை."

Published:Updated:
Priya Prakash Varrier ( Instagram Photo: @priya.p.varrier )

மும்பையில் உள்ள மிகப் பிரபல ஹோட்டல் ஒன்று, தன்னை மரியாதைக்குறைவாக நடத்தியதாகத் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் குற்றம்சாட்டி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார், நடிகை பிரியா வாரியர்.

மலையாளத் திரைப்பட நடிகையான பிரியா வாரியர், கேரள திருச்சூரில் பிறந்தவர். ஒரு மலையாளப் படத்தில், பள்ளி மாணவியாக இவர் புருவத்தை நெறித்து கண்ணடிக்கும் பாடல் காட்சி வைரலாக, இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த `ஒரு ஆதார் லவ்'தான் அந்தத் திரைப்படம்.

பிரியா வாரியர்
பிரியா வாரியர்

அந்தப் படத்தில் இடம்பெற்ற `மாணிக்க மலராயா பூவி' என்ற பாடலில் வரும் காட்சியில் இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிக்கும் காட்சிதான், இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தொடர்ந்து, கன்னட மொழியில் `கிரீக் லவ் ஸ்டோரி' திரைப்படம், தெலுங்கில் `லவ்வர்ஸ் டே' திரைப்படம் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார் பிரியா வாரியர். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக இவர் நடித்த `செக்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் இதுவரை இவர் நடிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போது பிரியா வாரியர், நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தித் திரைப்படத்தில் நடித்து வருகிறார். `ஸ்ரீதேவி பங்களா' என்னும் பெயரில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் பிரியா வாரியர் ஓரிரு காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம். அதை விமர்சித்துப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். பிரியா வாரியர், ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியா வாரியர், தான் நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா வாரியர் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பிரியா வாரியர், ``மும்பையில் உள்ள The Fern Goregaon ஹோட்டல் மிகவும் புத்திசாலித்தனமான கொள்கையைக் கொண்டுள்ளது. ஹோட்டலுக்குள் வெளி உணவு அனுமதிக்கப்படுவதில்லை.

The Fern Goregaon
The Fern Goregaon
Fernhotels.com

இதனால் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்கள் நாள் முழுக்க பணம் கொடுத்து அதே ஹோட்டலில்தான் உணவை ஆர்டர் செய்ய முடியும். ஹோட்டல் புக்கிங், படத் தயாரிப்பு நிறுவனங்களால் செய்யப்படும், நடிகர்களால் அல்ல என்பதால் அவர்களுடைய இந்தக் கொள்கை பற்றி எனக்குத் தெரியாது. எனவே, மும்பையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு ஹோட்டலுக்குத் திரும்பியபோது, வழியிலுள்ள ஒரு ரெஸ்டாரன்டில் எனக்கான இரவு உணவை வாங்கித் திரும்பினேன். ஆனால், அந்த உணவை ஹோட்டலுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றனர் ஹோட்டல் நிறுவனத்தினர். எனது அறையில் சென்றுதானே சாப்பிடப் போகிறேன் என சொல்லியும் விடவில்லை. பணம் கொடுத்து வாங்கிவிட்டதால் அந்த உணவை வீணாக்க இயலாது என்பதால் இந்த ஒருமுறை அனுமதிக்குமாறு நான் கேட்டேன். ஹோட்டலுக்கு வெளியே சென்று சாப்பிடுங்கள், அல்லது குப்பையில் போடுங்கள் என்றனர். இதைப் பெரிய சர்ச்சைபோல பேசிய அவர்கள், நான் சொல்ல வருவதைக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. மரியாதைக்குறைவாக உணர்ந்த நான், ஹோட்டலுக்கு வெளியே, பனியில் அமர்ந்து அந்த உணவை உண்டேன்" என்று பதிவு செய்திருக்கிறார்.

இது சோஷியல் மீடியாவில் வைரல் ஆனாலும், சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து பதில் எதுவும் இல்லை.

- வைஷ்ணவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism